IRS SVIAS

IRS SVIAS IRS – SVIAS seeks research papers for this Conference to be presented in the conference scope listed below.

Authors are invited to submit their Abstract and full papers within the broad scope of the Symposium.

International Research Symposium-BatticaloaPANEL DETAILS - NOVEMBER 25th 20219 AM- 11 AM
25/11/2021

International Research Symposium-Batticaloa
PANEL DETAILS - NOVEMBER 25th 2021
9 AM- 11 AM

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 2021............................
24/11/2021

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 2021................................................................................................................................
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இந்த ஆண்டுக்கான சர்வதேச ஆய்வு மாநாடு (24) இன்று மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இராசதுரை அரங்கில் நிறுவகத்தின் இன்னிய அணியினரின் வரவேற்புடன் ஆரம்பமானது.

வரவேற்புரையை கட்புல மற்றும் தொழில்நுட்ப கலைகள் துறையின் தலைவர் கலாநிதி சு.சிவரெத்தினம் நிகழ்த்தினார். சர்வதேச ஆய்வு மாநாட்டின் தலைவர் கலாநிதி ஜெயரஞ்சினி ஞானதாஸ் அறிமுகவுரையை நிகழ்த்தினார். நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி பணிப்பாளர் உரையை நிகழ்த்தினார்.

இணையவழி தொழில்நுட்பம் ஊடாகவும் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இசைத்துறைத் தலைவர் பேராசிரியர் ஞானா குலேந்திரன் பிரதம விருந்தினர் உரையை நிகழ்த்தினார்.

கௌரவ விருந்தினர் உரையை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருமலை வளாக முதல்வர் பேராசிரியர் வ. கனகசிங்கம் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கட்புல ஆற்றுகைகள் கலைகள் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சௌமிய லியனஹே சிறப்பு விருந்தினராக இணையவழியூடாக கலந்து கொண்டார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி சுதேஷ் மணிதிலஹே சிறப்பு விருந்தினர் உரையை ஆற்றினார்.

இந்நிகழ்வில் சென்னை கலாசேத்ரா கலைக் கல்லூரியின் வருகைதரு பேராசிரியரும், மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியின் இணைப்பேராசியருமான முனைவர் சே.இரகுராமன் தனது ஆதாரசுருதி உரையை பரதமும் ஆய்வும் என்ற தலைப்பில் நிகழ்த்தினார்.

நிறுவகத்தின் நடன நாடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தாக்ஷாயினி பரமதேவன் முனைவர் சே.இரகுராமனின் அறிமுகத்தை வழங்கினார்.

சர்வதேச ஆய்வு மாநாட்டின் செயலாளர் கலாநிதி க.சியாமளாங்கி நன்றியுரையை நிகழ்த்தினார்.
சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன், போதனாசிரியர் அ.ஜெபராஜா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுடைய கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மாலை 2மணிமுதல் 6 மணிவரை ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வாளர்களால் வாசிக்கப்பட்டன.

24/11/2021

Inauguration of IRS SVIAS-2021
held at Swami vipulanandha institute of aesthetic studies.

24/11/2021

Concept Message from the symposium chair & secretary of IRS SVIAS 2021.

சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம் அதன் சர்வதேச ஆய்வரங்கை (IRS-SVIAS-2021) அறிவிப்பதி...
22/10/2021

சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம் அதன் சர்வதேச ஆய்வரங்கை (IRS-SVIAS-2021) அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றது. உள்ளுர், தேசிய, சர்வதேச சமூகங்களைச் சேர்ந்த முன்னணி ஆய்வாளர்களை ஒன்றிணைத்து உயர்தர ஆய்வுக் கட்டுரைகளை உள்வாங்கிக் கொள்வதே இந்த சர்வதேச ஆய்வரங்கின் நோக்கம் ஆகும். அனுபவங்கள், கருத்துக்கள், புத்தாக்கக் கண்டுபிடிப்புக்கள் என்பவற்றினை வெளிக் கொண்டு வருவதற்கான சிறந்த வாய்ப்புக்களை வழங்கும் வகையில் அமர்வுகள் யாவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

‘பன்முகப் பண்பாட்டுக் கலைச் செயற்பாடுகளும் சமகால சர்வதேசப் போக்குகளும்’ என்பதே இவ் ஆய்வரங்கின் கருப்பொருளாகும்.’

பன்முகப் பண்பாட்டுக் கலைச் செயற்பாடுகள் சமூக, மத, இன வேறுபாடுகளைப் பொரு ட்படுத்தாது சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களிடையேயும் பரஸ்பர மரியாதை, தனிநபர் சுதந்திரம், சமத்துவம் என்பவற்றை மேம்படுத்துவதில் பெரும்; பங்காற்று கின்றன. பல் பண்பாடுகளுக்கிடையில் புதிய உறவுகளைப் பேணுவதில் சமகாலக் கலை வடிவங்கள் முன்னணி வகிக்கின்றன. நடனம், அரங்கு, சினிமா, கவிதை, இசை, கட்புலக் கலைகள் போன்ற இன்னோரன்ன கலை மற்றும் சமூகத்துறைகள் ஒன்றுடனொன்று இணைவதற்கான தளத்தினை வழங்குகின்றன. பல்பண்பாடுகள் சமூகத்தில் காணப்படும் வேறுபட்ட பண்பாடுகளையும் அடையாளங்களையும் அங்கீகரிக்கவும் சிறப்பிக்கவும் சமூக உறவுகளை மேம்படுத்தவும் உதவுகின்றன. கலை எல்லை களற்றது. இது ஒரு சமூகத்தின் இயல்பு, அதன் இருப்பைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய அம்சம் ஆகும். மேற்குறித்த பரந்துபட்ட கருப்பொருளில் IRS-SVIAS-2021 ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கின்றது.

Address

Swami Vipulananda Institute Of Aesthetic Studies(SVIAS), Eastern University, Kallady
Batticaloa
30000

Opening Hours

Monday 08:00 - 16:15
Tuesday 08:00 - 16:15
Wednesday 08:00 - 16:15
Thursday 08:00 - 16:15
Friday 08:00 - 16:15

Alerts

Be the first to know and let us send you an email when IRS SVIAS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share