Jaffna University Students' Union

Jaffna University Students' Union Official Facebook Profile of the Jaffna University Students' Union.

Press Release University Students’ Union, University of Jaffna 02/06/2026
02/06/2026

Press Release
University Students’ Union,
University of Jaffna
02/06/2026

ஊடக அறிக்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழப்பாணப் பல்கலைகழகம் 02/06/2026
02/06/2026

ஊடக அறிக்கை
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,
யாழப்பாணப் பல்கலைகழகம்
02/06/2026

நேற்று என் கனவில்புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.சிவில் உடை அணிந்தஅரச காவலர் அவரைக் கொன்றனர்.யாழ் நூலகத்தின் படிக்கட்...
31/05/2026

நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.
இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று சினந்தனர்.
'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்......
என்றனர் அவர்கள்.
'சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை'
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
தம்மபதமும் தான் சாம்பல் ஆனது!

- பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் -

யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள் (1981-2026)

ஆண்டுகள் பதினேழு கடந்த போதும்அணையவில்லை அந்த அழுகுரல்!முள்ளிவாய்க்கால் மண்ணில் கயவர் களவாடிய உயிர்களின் நினைவுகள் எங்கள்...
17/05/2026

ஆண்டுகள் பதினேழு கடந்த போதும்
அணையவில்லை அந்த அழுகுரல்!

முள்ளிவாய்க்கால் மண்ணில் கயவர் களவாடிய உயிர்களின் நினைவுகள் எங்கள் நெஞ்சில் இன்னும் எரிகின்றன!

கண்ணீரும் செங்குருதியும் உறைந்து கிடக்கும்
அந்த நினைவுத்தூபியின் நிழலில், மீண்டும் ஒருமுறை இதயங்களால் அஞ்சலிப்போம்.

நினைவேந்தல் நிகழ்வு:
📅 திகதி: மே 18, 2026 (திங்கட்கிழமை)
🕝 நேரம்: பிற்பகல் 2:30 மணி
📍 இடம்: தமிழினப்படுகொலை நினைவுத்தூபி,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

உறவுகளை நினைவேந்த பொதுமக்களையும் மாணவர்களையும் அன்புரிமையோடு அழைத்து நிற்கின்றோம்.

~ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

#முள்ளிவாய்க்கால் #தமிழினப்படுகொலை

நினைவாயுதம் - எமது வலிகளின் காலப்பெட்டகம்🕯️முள்ளிவாய்க்கால் மண்ணின் கண்ணீரும், வலிகளும் வெறும் கதைகளல்ல.. அவை எமது இனம் ...
15/05/2026

நினைவாயுதம் - எமது வலிகளின் காலப்பெட்டகம்🕯️

முள்ளிவாய்க்கால் மண்ணின் கண்ணீரும், வலிகளும் வெறும் கதைகளல்ல.. அவை எமது இனம் சுமந்த பெருந்துயரம்!

எம் இன வலிகளை உணர்ந்து, தமிழ் இனம் கண்ட அவலத்தை இதயத்தில் ஏந்திட வாருங்கள்!

நிகழ்வு விபரம்:
📅 திகதி: மே 16, 17, 18 (2026)
🕘 நேரம்: முற்பகல் 9:00 முதல் பிற்பகல் 4:00 வரை
📍 இடம்: மாணவர் ஒன்றிய கட்டடத் தொகுதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

மறக்க முடியாத வடுக்களும், ஆறாத காயங்களும் சுமந்த எமது இனத்தின் வலிகளை.. வரலாற்றின் பக்கங்களில் இருந்து நாளைய தலைமுறைக்கு கடத்தும் ஒரு சிறு முயற்சி. 🤍

*அனைவருக்கும் அனுமதி இலவசம்.

~ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாணப் பல்கலைகழகம்

#நினைவாயுதம் #மே18

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, பல்கலைக்கழக மாணவர் சமூகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி கொட...
14/05/2026

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, பல்கலைக்கழக மாணவர் சமூகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுக்கும் செயற்திட்டத்தின் மூண்றாம்நாள் இன்று காலை மன்னார் நகரில் இடம்பெற்றது….

புதுக்குடியிருப்பு ,முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் பகுதிகளில் 13.05.2026 மாலை பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினால் முள்ளிவாய்க்க...
14/05/2026

புதுக்குடியிருப்பு ,முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் பகுதிகளில் 13.05.2026 மாலை பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது….

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இன்று மதியம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது போது……
13/05/2026

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இன்று மதியம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது போது……

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, பல்கலைக்கழக மாணவர் சமூகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி கொட...
13/05/2026

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, பல்கலைக்கழக மாணவர் சமூகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுக்கும் செயற்திட்டத்தின் இரண்டாம் நாள் இன்று காலை கிளிநொச்சி நகரில் இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, பல்கலைக்கழக மாணவர் சமூகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி கொட...
12/05/2026

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, பல்கலைக்கழக மாணவர் சமூகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுக்கும் செயற்திட்டம் வல்லை நகரில் ஆரம்பம்.

வளரிளம் தலமுறைக்கு, தமிழ் மக்களின் மீதிழைக்கபட்ட திட்டமிட்ட இனப்படுகொலையின் உச்ச காலத்தில் மக்களின் உயிர் காத்த இவ் உப்பில்லா அரிசிக் கஞ்சி எம் வரலாற்றைக் கடத்திச் செல்லும். 🕯️

Address

PO Box 57, Thirunelvely, Yazlpannam (Jaffna)
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna University Students' Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jaffna University Students' Union:

Share