அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப் பாடசாலை - கஹடோவிட

  • Home
  • Sri Lanka
  • Kahataowita
  • அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப் பாடசாலை - கஹடோவிட

அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப் பாடசாலை - கஹடோவிட Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப் பாடசாலை - கஹடோவிட, Community College, Al-Badriya Maha Vidyalaya/Kahatowita, Kahataowita.

01/12/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபரகாதுஹு.

*_முக்கிய அறிவித்தல்._*

சீரற்ற காலநிலையால் கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்தங்கள் மற்றும் இழப்புக்கள் எமதூர் மக்களையும் வெகுவாகப் பாதித்திருப்பதும், அதிலிருந்து மீளுவதற்கு இன்னும் பல தினங்கள் தேவைப்படும் என்பதும் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் ஏற்கனவே அறிவித்திருந்த படி எதிர்வரும் 04.12.2025 வியாழக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடத் தயாராக இருந்த எமதூரின் முதலாவது அறநெறிப் பாடசாலையான *அல் முஸ்தபவிய்யாஹ் அஹதிய்யாப் பாடசாலையின் முப்பெரும் விழா மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது* என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

*حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيلُ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ*

இன் ஷா அள்ளாஹ் இவ் விழா நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

வல்ல நாயன் அள்ளாஹுத் தஆலா பாதிக்கப்பட்ட அனைவரினதும் நிலைமைகளை சீராக்குவானாக.....🤲🤲🤲
ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲🤲🤲🤲

இப்படிக்கு,
அல் முஸ்தபவிய்யாஹ் அஹதிய்யாப் பாடசாலை,
கஹட்டோவிட்ட.

_2025/12/01_

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபரகாதுஹு.*_முக்கிய அறிவித்தல்._*சீரற்ற காலநிலையால் கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில...
25/11/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபரகாதுஹு.

*_முக்கிய அறிவித்தல்._*

சீரற்ற காலநிலையால் கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்தங்கள் மற்றும் இழப்புக்கள் எமதூர் மக்களையும் வெகுவாகப் பாதித்திருப்பதும், அதிலிருந்து மீளுவதற்கு இன்னும் பல தினங்கள் தேவைப்படும் என்பதும் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் ஏற்கனவே அறிவித்திருந்த படி எதிர்வரும் 04.12.2025 வியாழக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடத் தயாராக இருந்த எமதூரின் முதலாவது அறநெறிப் பாடசாலையான *அல் முஸ்தபவிய்யாஹ் அஹதிய்யாப் பாடசாலையின் முப்பெரும் விழா மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது* என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

*حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيلُ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ*

இன் ஷா அள்ளாஹ் இவ் விழா நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

வல்ல நாயன் அள்ளாஹுத் தஆலா பாதிக்கப்பட்ட அனைவரினதும் நிலைமைகளை சீராக்குவானாக.....🤲🤲🤲
ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲🤲🤲🤲

இப்படிக்கு,
அல் முஸ்தபவிய்யாஹ் அஹதிய்யாப் பாடசாலை,
கஹட்டோவிட்ட.

_2025/12/01_

*அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப் பாடசாலை - கஹட்டோவிட்ட.*

*_முப்பெரும் விழா - 2025_*
*~~~~~~~~~~~~~~~~~~~~~*

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபரகாதுஹு.*

*எம் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ரஸூலுள்ளாஹி ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் 1500 வது ஆண்டு மீலாத் விழா, அத்துடன் எமதூரின் முதலாவது அறநெறிப் பாடசாலையான அல் முஸ்தபவிய்யாஹ் அஹதிய்யாப் பாடசாலையின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் வருடாந்த பரிசளிப்பு விழா என்பன அடங்கிய முப்பெரும் விழா பின்வரும் அமைப்பில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.*
*அல்ஹம்துலில்லாஹ்.*

*காலம் :- 04.12.2025 வியாழக்கிழமை*

*நேரம் :- காலை 08.30 முதல் முற்பகல் 11.30 வரை*

*இடம் :- கேட்போர் கூடம், முஸ்லிம் மகளிர் கல்வி வட்டம் (Muslim Ladies Study Circle Auditorium)*

*இந் நிகழ்வில் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.*

*இப்படிக்கு,*
*அதிபர், ஆசிரியர் மற்றும் நிர்வாகம்,*
*அல் முஸ்தபவிய்யாஹ் அஹதிய்யாப் பாடசாலை,*
*கஹட்டோவிட்ட.*

2026 ஆம் ஆண்டுக்கான இஸ்லாமிய மாத கலண்டர் தற்போது விற்பனையாகிக்கொண்டு வருகின்றது. கஹட்டோவிட்ட அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா ப...
22/11/2025

2026 ஆம் ஆண்டுக்கான இஸ்லாமிய மாத கலண்டர் தற்போது விற்பனையாகிக்கொண்டு வருகின்றது.

கஹட்டோவிட்ட அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா பாடசாலை மற்றும் அல் மத்ரஸதுல் முஸ்தபவிய்யா குர்ஆன் மத்ரஸா நிர்வாகத்தினர் இணைந்து மேற்கொண்டு வரும் இந்த இஸ்லாமிய மாத கலண்டர்களை பெற்றுக்கொண்டு மாணவர்களுக்கான சன்மார்க்க கல்வி அபிவிருத்திக்கு உங்களாலும் பங்களிப்பு செய்ய முடியும் என்பதனுடன் மேற்குறிப்பிட்ட இரண்டு நிர்வாகங்களுக்கும் அதன் நிர்வாக காரியங்களை செய்து கொள்வதற்கு உதவ முடியும்.

மேலும் உங்கள் ஒவ்வொரு வீடுகளிலும் இந்த நாட்காட்டியை தொங்க விடுவதனூடாக மாணவர்களை அஹதிய்யாவுக்கு அனுப்புவதற்கான நினைவூட்டலாகவும் அமையும்.

இஸ்லாமியர்களின் விசேட நிகழ்வுகள் நினைவு தினங்கள் தொழுகை நேரங்கள் என பல உள்ளடக்கங்களையும் கொண்டமைந்துள்ள இந்த கலண்டர்களை வாங்க இன்றே முந்திக்கொள்ளுங்கள்.

ஒரு கலண்டருக்கான விலை ரூபா . 350/-
கலண்டர்களை எதிர்வரும் 4 ஆம் திகதி கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடிஸ் மகளிர் கட்டிடத்தில் நடைபெறவுள்ள அஹதிய்யாவின் 20 ஆம் வருட பூர்த்தி விழாவின்போதும் பெற்றுக்கொள்ள முடியும்.
தொடர்புகளுக்கு .

மொஹம்மத் ஸயீத் :+94 77 228 9779

நேற்று 5/11/2025 கம்பஹா மாவட்ட அஹதிய்யா பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பாசறை நிகழ்வு வத்த...
06/11/2025

நேற்று 5/11/2025 கம்பஹா மாவட்ட அஹதிய்யா பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பாசறை நிகழ்வு வத்தளை நகர சபை மண்டபத்தில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கான அநுசரணையை கம்பஹா மாவட்ட மத்திய சம்மேளனம் மற்றும் Stage TV நிறுவனத்தினர் இணைந்த அநுசரணையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

நேற்றைய இந்த நிகழ்வுக்கு கம்பஹா மாவட்டத்தில் காணப்படும் 29 பதிவு செய்யப்பட்ட அஹதிய்யா பாடசாலைகளில் இருந்தும் சுமார் 250 ஆசிரிய ஆசிரியைகள் , அதிபர்கள் மற்றும் நிர்வாகத்தினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் எமது அஹதிய்யா பாடசாலை அதிபர் இக்ராம் அஹ்மத் அவர்கள் ஆசிரியர்களுக்காக வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நிகழ்வு பற்றிய கருத்துரை வழங்குவதையும் எமது அஹதிய்யாவின் நிர்வாக உறுப்பினரும் ஆசிரியருமான அல் ஹாஜ் பிர்தௌவஸ் அவர்கள் தற்காலத்தில் அஹதிய்யா பாடசாலை நடாத்துவதில் எதிர் கொள்ளும் சவால்களில் பிரத்தியேக வகுப்புகளை அஹதிய்யா நேரத்தில் போடுவதனால் பிள்ளைகளின் வருகை மிகக்குறைவாக இருப்பதை சபையோர் மத்தியில் முன்வைத்ததோடு இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் கௌரவ பிர்சாத் அவர்களின் கவனத்துக்கு இதை விட்டதோடு இதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை எதிர்காலத்தில் திணைக்களம் மூலம் மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று நடைபெற்ற பயிற்சிப் பாசறையில் நடாத்தப்பட்ட டிஜிட்டல் கேள்வி பதில் போட்டியில் எமது அஹதிய்யாவில் இருந்து கலந்து கொண்ட ஆசிரியர் இக்ராம் அஹமத் அவர்கள் சகல கேள்விகளுக்கும் சரியாகவும் வேகமாகவும் பதிலளித்தவர்களுள் முதலாம் இடத்தையும் ,எமது அஹதிய்யாவின் ஆசிரியர் இஸ்மாயில் ஹஸ்ரத் அவர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டதோடு இவர்களுக்கான பணப்பரிசு வவுச்சர்களும் ஏற்பாட்டு குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

இதன் இறுதியில் 25 வருடங்களை அஹதிய்யா ஆசிரியப்பணியில் பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கான நினைவு சின்னம் வழங்கி வைக்கப்பட்டதோடு இந்ந பரிசளிப்பு நிகழ்வில் சமூக சேவகரும் எமது அஹதிய்யா பாடசாலை ஆசியரும் பிரதேச சபை உறுப்பினருமான அல் ஹாஜ் பிர்தௌவஸ் அவர்களால் குறித்த ஆசிரியர்களுக்கான நினைவு சின்னம் வழங்கி வைக்கப்படுவதையும்,சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வின் படங்களையும் காணலாம்.
,

அஹதிய்யா சுற்றுலாவின் (17) போது பிடிக்கப்பட்ட படங்கள் இதுவரை பகிரப்படாதது. பல்வேறு சந்தர்ப்பங்களின் போது பிடிக்கப்பட்ட ப...
25/08/2025

அஹதிய்யா சுற்றுலாவின் (17) போது பிடிக்கப்பட்ட படங்கள் இதுவரை பகிரப்படாதது. பல்வேறு சந்தர்ப்பங்களின் போது பிடிக்கப்பட்ட படங்கள்.

இதன் தனித்தனி விபரக்குறிப்புகள் யாவும் ஏற்கனவே 1 முதல் 8 வரையான பதிவுகளாக பதிவிடப்பட்டுள்ளன.

அஹதிய்யா சுற்றுலா காலி கோட்டை விஜயம்.07 & 08 காலி சோலையில் காணப்படும் முபாரக் மௌலானா ஸியாரத் தரிசிப்பு மற்றும் வீடு திரு...
23/08/2025

அஹதிய்யா சுற்றுலா காலி கோட்டை விஜயம்.07 & 08 காலி சோலையில் காணப்படும் முபாரக் மௌலானா ஸியாரத் தரிசிப்பு மற்றும் வீடு திரும்பல்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அஹதிய்யா சுற்றுலாவின் ஓரங்கமாக காலி கோட்டையை பார்ப்பதற்கு பயணம் மேற்கொண்டிருந்தோம்.

அங்கு விசேடமாக யாரும் பொதுவாக செல்லாத யாருக்கும் இலகுவாக செல்ல கிடைக்காத ஒரு ஸியாரம் கோட்டையின் கீழே அமையப்பெற்றுள்ள கடலோரமாக அமைந்துள்ளதை காணக்கூடியதாக இருந்தது.

இதன் நாலா சுற்றுப்பகுதியும் கருங்கற்பாறைகளினால் சூழப்பட்டுள்ளது.மேலும் விசேடமாக இதனை அண்மித்து ஒரு கிணறு காணப்படுகிறது இந்த கிணற்றின் விசேடம் என்னவென்றால் கடலோடு 10 மீற்றராவது இடைவெளி இல்லாமல் மிகவும் நெருக்கமாக காணப்படும் இதன் நீரில் எந்த வித உப்புத்தன்மையோ, அல்லது குடிக்க முடியாத கியுள் தன்மையோ காணப்படாமல் நமது ஊர் கிணற்றில் காணப்படும் தூய்மையான சுவையோ கியுளோ உவர்ப்போ இல்லாமல் மிகவும் மதுரமான நீராக காணப்படுவதாகும்.

பூவோடு சேர்ந்த நாறும் நறுமணம் பெறுவது போல் இந்த இடத்தில் காணப்படும் இறைநேசரின் காரணமாக இந்த கிணறு இவ்வாறு அற்புதமான முறையில் விசேடத்துவம் பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த ஸியாரம் எவ்வாறு அக்காலத்தில் கற்பாறைகளை குடைந்து தோண்டப்பட்டது என்பதும் அங்கு கடலின் பாதிப்புகள் இன்றி இன்று வரையிலும் பாதுகாக்கப்படுகிறது என்பதும் அற்புதமானதாகும்.

இந்த இடத்தை பற்றி நன்கு அறிந்த எம்மோடு சுற்றுலாவில் சென்ற அஹதிய்யா ஆசிரியர் அப்துல் பாரி ஆவியின் வழிகாட்டலிலும் அப்துல் கரீம் மௌலவி அவர்களின் விசேட வேண்டுகோளின் அடிப்படையில் பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்றே நமக்கும் நமது அஹதிய்யா பிள்ளைகளுக்கும் இந்த இடத்தை காண்பிப்பதற்கும் அந்த கிணற்றில் நீர் அருந்தி பார்ப்பதற்கும் சந்தர்ப்பம் கிட்டியது.

உண்மையில் அனைவரும் போய் பார்க்க வேண்டிய மிகவும் அற்புதமான இடமாகும் ஆனால் இலங்கை இராணுவத்தினரால் குறித்த இடம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தனி நபர்களுக்கு போய் பார்க்கும் வாய்ப்பு குறைவு ஒரு குழுவாக அதிக எண்ணிக்கையில் கொண்டவர்களுடன் பாதுகாப்பு தரப்பினரின் உரிய அனுமதியை பெற்றே இதற்கு செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து காலி கோட்டையில் உள்ள ஒல்லாந்தரின் சிறையை பார்க்க சென்றோம் சுமார் 40 முதல் 50 அடிகள் ஆழத்தில் நான்கு பக்கங்களாலும் பெரும் சுவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு அந்த சிறை கட்டப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இதனையடுத்து இரவு மக்ரிப் மற்றும் இஷா தொழுகை கோட்டைப் பள்ளியில் ஜமாஅத்துடன் நிறைவேற்றப்பட்டு இரவு சாப்பாட்டுடன் அங்கிருந்து
காலி சோலையில் காணப்படும் நபவிய்யதுல் காதிரிய்யாவின் ஸ்தாபகரும் குறித்த தரீக்காவை இலங்கையில் அஷ்ஷெய்ககு முஸ்தபா இப்னு பாவா ஆதம் ரஹ்மதுள்ளாஹ் அவர்களுக்கு வழங்கியவருமாகிய யெமனை சேர்ந்த அஷ்ஷெய்க் முபாரக் மௌலானா நாயகம் அவர்களின் ஸியாரத் ஷரீபுக்கு சென்று பாத்திஹா ஓதி சுற்றுலாவை நிறைவு செய்து வீடு திரும்பினோம்.

வரும் வழியே கௌரவ இக்ராம் பாஸி ஹஸ்ரத் அவர்களின் ஏற்பாட்டில் எல்லோருக்கும் நெஸ்கபே எடுத்து கொடுத்து மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் நம்மை நல்ல முறையில் உபசரிப்பு செய்து வழியனுப்பி வைத்தார்கள் அல்லாஹ் அவர்களின் விருந்தோம்பல் ஐ பொருந்தி கொண்டு மேலான நற்கூலியை வழங்குவானாகவும்.

மேலும் காலியில் இருந்து மாணவர்களுக்கு தேவையான இரவு உணவை கொண்டு வந்து கொடுப்பதிலும், காலியில் பல்வேறு இடங்களுக்கும் செல்வதற்கு உரிய பயண வழிகாட்டியாகவும் எமது அஹதிய்யா பாடசாலை முன்னால் ஆசிரியர் சகோதரர் அப்துல் கரீம் மௌலவி அவர்களுக்கும் அல்லாஹ் அவனது மேலான நற்கூலியை வழங்கியருள்வானாகவும்.

இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்வதில் அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ், அதிபர் இக்ராம் அஹ்மத், ஆசிரியர் பவாஸ், பொருளாளர் லுதுபுள்ளாஹ், செயலாளர் ஹுஸ்னி, சகோதரர் பாயிக் மற்றும் இஸ்மாயில் ஆலிம் போன்றோர்களுக்கும் , காலை உணவு வழங்கி எம்மை நகர சபைக்கு அழைத்து கௌரவித்த நகரமேயர் அப்ராஸ் அவர்களுக்கும் மற்றும் அவரது சகோதரர் அஷ்கர் அவர்களுக்கும்,
முழு நேர வழிகாட்டியாகவும் மகத்தான உபசரிப்பாளராகவும்,நம்மை கௌரவத்தோடு அழைத்து கௌரவமான முறையில் கவனித்து வீடு திரும்பும் வரைக்கும் நம்மோடு ஒன்றாக சுற்றுலாவில் இணைந்து உதவி உபகாரம் புரிந்த மாத்தறை மீரா அஹதிய்யா பாடசாலை அதிபர் மௌலவி இக்ராம் பாஸி அவர்களுக்கும்,அந்த அஹதிய்யா ஆசிரியர்களுக்கும், அப்துல் கரீம் மௌலவி அவர்களுக்கும் மேலும் யாரெல்லாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த சுற்றுலா வெற்றி கரமாக அமைவதற்கு உதவினார்களோ அவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் நல்ல முறையில் சென்று வரும் வரைக்கும் ஒத்துழைப்பு வழங்கிய மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் எமது அஹதிய்யா பாடசாலை சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்லாஹ் உங்கள் சேவைகளை ஏற்று மேலான நற்கூலியை ஈருலகிலும் வழங்குவானாகவும் ஆமீன்.

தொகுப்பு
எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்
ஆசிரியர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்
அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா பாடசாலை.

அஹதிய்யா சுற்றுலா நிகழ்வு 06மாத்தறை மிரிஸ்ஸையில் காணப்படும் தென்னை மர மலை Coconut Tree Hill இற்கு சென்று அங்குள்ள கண்கொள...
21/08/2025

அஹதிய்யா சுற்றுலா நிகழ்வு 06

மாத்தறை மிரிஸ்ஸையில் காணப்படும் தென்னை மர மலை Coconut Tree Hill இற்கு சென்று அங்குள்ள கண்கொள்ளாக்காட்சியை கண்டு இரசித்ததோடு எல்லோருடனும் புகைப்படங்கள் பிடித்து கொண்ட காட்சிகள்.

கடலோடு மலை அங்கு அழகிய முறையில் தென்னை மரங்கள் அதன் உயரத்தில் இருந்து கடலை பார்க்கும் போது மிகவும் அழகான கடற்காட்சிகள் மனதை மிகவும் கவர்ந்திருந்ததோடு இரம்மியமான இன்மபான சூழலாலகவும் இயற்கையிலே அமையப் பெற்றிருக்கும் இலங்கையின் தலைசிறந்த சுற்றுலா இடமாகும்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமதிகம் இங்கு வருகை தருகின்றனர் இந்த கடலில் டொல்பின்கள், ஆமைகள் மற்றும் அழகிய மீன்கள் என சற்று தொலைவில் காணப்படுகின்றது ஆனால் அவற்றுக்கு வேறாக பணம் செலுத்தி படகில் பயணித்து செல்ல வேண்டும்.

இந்த பயணத்தில் எம்மோடு மாத்தறை மீரா அஹதிய்யா பாடசாலை அதிபர் கௌரவ மௌலவி இக்ராம் பாஸி ஹஸ்ரத் அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் நம்மோடு இணைந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

அஹதிய்யா சுற்றுலா நிகழ்வு 05அஹதிய்யா சுற்றுலாவின் நான்காவது அம்சமாக ளுஹர் மற்றும் அஸர் தொழுகை சுருக்கியும் சேர்த்தும் ( ...
21/08/2025

அஹதிய்யா சுற்றுலா நிகழ்வு 05

அஹதிய்யா சுற்றுலாவின் நான்காவது அம்சமாக ளுஹர் மற்றும் அஸர் தொழுகை சுருக்கியும் சேர்த்தும் ( கஸ்ரு ஜம்உ))
தொழுவது பற்றிய செயன்முறையுடன் கூடிய வகையில் மாணவர்களுக்கு அது பற்றிய விளக்கத்தை அப்துல் பாரி ஆலிம் வழங்கி ஜமாத்தாக தொழுவிக்கும் போதான காட்சியையும்,

பகல் போசனத்தின் போதான காட்சிகளையும் காணலாம் இந்த நிகழ்வு மாத்தறை அவ்லியா மலையில் அமையப்பெற்றுள்ள பள்ளிவாசலில் நடைபெற்றது அதன் அருகில் யெமனை சேர்ந்த இறைநேச செல்வர் ஒருவரின் ஸியாரமும் காணப்பட்டது.

பகலுணவுக்கான பூரண அனுசரணை மாத்தறை மீரா அஹதிய்யா அதிபர் கௌரவ மௌலவி இக்ராம் பாஸி ஹஸ்ரத் அவர்களின் ஏற்பாட்டில் மிகவும் அழகாகவும் அருமையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்லாஹ் அவர்களுக்கும் இதிலே உதவி ஒத்தாசை புரிந்த அனைவருக்கும் நல்லருள் புரிவானாகவும் ஆமீன்.

20/08/2025

கடற்கரையில் அலைகளுடன் விளையாடும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் .

அஹதிய்யா சுற்றுலா நிகழ்வு 04மாணவ மாணவிகள் மாத்தறை கடற்கரையோரமாக கடற்காற்றையும்,கடல் நீரையும் இயற்கை சூழலுடனும் சங்கமிக்க...
20/08/2025

அஹதிய்யா சுற்றுலா நிகழ்வு 04

மாணவ மாணவிகள் மாத்தறை கடற்கரையோரமாக கடற்காற்றையும்,கடல் நீரையும் இயற்கை சூழலுடனும் சங்கமிக்கும் இயற்கை இன்ப காட்சிகள் கடலில் குளிப்பதற்கு ஏற்ற நிலைமை காணப்படாமையால் ஆபத்தானது என்று பலரும் கூறியதால் மாணவர்கள் கடலில் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.

வெட்ட வெயிலுக்கு மத்தியில் மௌலவி இக்ராம் பாஸி ஹஸ்ரத் அவர்கள் வழங்கிய ஐஸ் கிரீம் எல்லோருக்கும் இதமாகவும் இனிமையாகவும் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் அமைந்திருந்தது அல்லாஹ் அவர்களுக்கு மென்மேலும் பரக்கத் செய்வானாகவும்.

அஹதிய்யா சுற்றுலா நிகழ்வு 03 மாத்தறை மீரா அஹதிய்யா பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் சந்திப்பு மற்றும் ஒன்று கூடல் ...
19/08/2025

அஹதிய்யா சுற்றுலா நிகழ்வு 03

மாத்தறை மீரா அஹதிய்யா பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் சந்திப்பு மற்றும் ஒன்று கூடல் நிகழ்வு.

எமது அஹதிய்யா பாடசாலையின் சுற்றுலா பிரதானமாக மாத்தறை மீரா அஹதிய்யா பாடசாலை அதிபர் கௌரவ மௌலவி இக்ராம் பாஸி ஹஸ்ரத் அவர்களின் அழைப்பிலும் ஏற்பாட்டிலும் அஹதிய்யா மாணவர்களுடனான ஒன்றுகூடல் சந்திப்பு மாத்தறை மீரா அஹதிய்யாவில் நடைபெற்றது.

சுமார் 750 மாணவ மாணவிகள் இந்த அஹதிய்யாவில் சன்மார்க்க கல்வியை சிறப்பாக பெற்று வருகின்றனர்.இந்த அஹதிய்யாவின் ஸ்தாபகர் இக்ராம் பாஸி ஹஸ்ரத் அவர்கள் மௌலவி பட்டம் பெற்று வெளியாகிய பின்னர் 72 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அஹதிய்யா பாடசாலை அஹ்லுஸ்ஸுன்னத் ஜமாஅத்தின் கொள்கை கோட்பாடுகளுக்குட்பட்டதாக மாணவர்களுக்கு தேவையான குர்ஆன் ஹதீஸ் பிக்ஹ் அகீதா போன்ற சன்மார்க்க போதனைகளை சிறப்பாக வழங்கி வருகிறார்கள்.
மாணவர்களின் தஜ்வீத் மற்றும் கஸீதா உச்சரிப்புகள் மிகவும் சிறப்பாக இருப்பதை அங்கு இடம்பெற்ற மாணவர்களின் கிராஅத் கஸீதாக்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஆரம்ப உரையை நிகழ்த்திய அஹதிய்யா அதிபர் மௌலவி இக்ராம் பாஸி ஹஸ்ரத் அவர்கள் தமது அஹதிய்யாவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி தெரிவித்து அறிமுக உரையை நிகழ்த்தினார்.

அஹதிய்யாவுக்கும் நபவிய்யா தரீக்காவுக்குமிடையே காணப்பட்ட தொடர்பு மற்றும் அவருக்கும் கஹட்டோவிட்டாவிற்கும் இடையிலான உறவு மற்றும் அஹதிய்யா பாடசாலையை ஆரம்பம் முதல் தற்போது எப்படி செய்து வருகிறார்கள் என்ற விடயங்களை எல்லாம் அழகான முறையில் எடுத்து கூறியதுடன் அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உலமாக்கள்,மாணவ மாணவிகளை வரவேற்று ஆரம்ப உரையை நிகழ்த்தினார்கள்.

பின்னர் அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா பாடசாலை அதிபர் இக்ராம் அஹ்மத் அவர்களின் உரையும் இக்ராம் பாஸி ஹஸ்ரத்துக்கும் கஹட்டோவிட்டாவுக்கும் இருக்கும் அந்நியோண்ணிய உறவு குறித்து ம் ஹஸ்ரத் ஆற்றிவரும் சேவைகளை பாராட்டியும் இந்த சுற்றுலாவில் கலந்து கொண்டவர்களுக்கு பகல் போசனம் ஏற்பாடு செய்து கொடுத்தமைக்காகவும் இரண்டு அஹதிய்யாக்களுக்கு இடையேயான சந்திப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தமைக்காகவும் அஹதிய்யா பாடசாலை நிர்வாகம் சார்பில் நன்றிகளையும் தெரிவித்தார்.

இதனையடுத்து அஹதிய்யா பாடசாலை ஆசிரியரும் ஸுன்னத்து வல் ஜமாஅத்தின் மூத்த ஆலிம் அப்துல் பாரி ஆலிம் அவர்களின் அல்லாஹ் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டிய விடயங்கள் குறித்து சிற்றுரை ஒன்றை ஆற்றினார்.

இதனையடுத்து அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா பாடசாலையினால் மாத்தறை மீரா அஹதிய்யா பாடசாலை அதிபர் கௌரவ இக்ராம் பாஸி ஹஸ்ரத் அவர்களுக்கு நினைவு சின்னம் ஒன்றை பாடசாலை அதிபர் இக்ராம் அஹ்மத் மற்றும் அப்துல் பாரி ஆலிம் மற்றும் பிரதேச சபை உறுப்பினரும் அஹதிய்யா நிர்வாகியுமான அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ், ஆசிரியர் பவாஸ் மற்றும். அஹதிய்யா நிர்வாக பொருளாளர் எம் ஆர் லுதுபுள்ளாஹ், மற்றும் நிர்வாக சபை உறுப்பினர் எம்.ஐ . மொஹம்மத் அவர்களும் இந்த நினைவு சின்னம் வழங்கும் நிகழ்வில் இணைந்துள்ள தை படங்களில் காணலாம்.

இதனையடுத்து எமது அஹதிய்யா மாணவ மாணவிகளுக்கு மௌலவி இக்ராம் பாஸி ஹஸ்ரத் அவர்களினால் சிறந்த உபதேசமும் நஸீஹத்தும் அறிவுரைகளும் வழங்குவதையும் படங்களில் காணலாம்.

Address

Al-Badriya Maha Vidyalaya/Kahatowita
Kahataowita
KAHATOWITA-11144

Website

Alerts

Be the first to know and let us send you an email when அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப் பாடசாலை - கஹடோவிட posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share