13/05/2026
ஈமானிய்யா அரபுக் கல்லூரி - திஹாரி
ஹிப்ழ் பிரிவு
எமது ஈமானிய்யா அரபுக் கல்லூரியில் இவ்வருடம் புதிதாக இணைந்து கொண்ட மாணவர்கள் 'நூரானி காஇதா' மற்றும் 'முதலாம் ஜுஸ்உ' ஆகியவற்றை வெற்றிகரமாக மனனம் செய்து முடித்துள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ்
மாணவர்கள் விபரம்:
• M.R. யூசுப்
• M.K. யூசுப்
• S.F. சம்ஹான்
இம்மாணவர்களின் இந்த ஆர்வத்தையும், முறையான பயிற்சியையும் பாராட்டும் விதமாக மத்ரஸா நிர்வாகத்தின் மூலம் இவர்களுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இது இவர்களது நீண்ட நெடிய கல்விப் பயணத்தின் ஒரு சிறந்த ஆரம்பமாகும்.
யா அல்லாஹ்! இம்மாணவர்களின் நெஞ்சங்களில் உனது திருமறையை ஆழமாகப் பதியச் செய்வாயாக! இவர்களை முழுமையான ஹாபிழ்களாகவும், ஆலிம்களாகவும் உருவாக்கி, உனது தீனுக்காகப் பணியாற்றும் பாக்கியத்தை இவர்களுக்கும், இவர்களை வழிநடத்தும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் வழங்கியருள்வாயாக! ஆமீன்.
13.05.2026
ஈமானிய்யா அரபுக் கல்லூரி