Railway colony municipal higher secondary school

Railway colony municipal higher secondary school Higher secondary school for tamil & english medium (co-education) opened by Dr.MGR

Mr. Jayavelu Ramaswamy sir who passed 11th STD on 1969 is happily shared his golden memory with us. Is there anybody her...
27/03/2023

Mr. Jayavelu Ramaswamy sir who passed 11th STD on 1969 is happily shared his golden memory with us. Is there anybody here studied during that period?

Happy Teachers Day to all living Gods..
05/09/2018

Happy Teachers Day to all living Gods..

Living Gods...
06/03/2018

Living Gods...

The legend got one more feather in his hat... Hats Off You & Many congratulations sir..
04/01/2018

The legend got one more feather in his hat...
Hats Off You & Many congratulations sir..

http://www.vikatan.com/news/india/81249-perfect-reply-to-america-who-made-comment-on-isro-through-cartoon.html
19/02/2017

http://www.vikatan.com/news/india/81249-perfect-reply-to-america-who-made-comment-on-isro-through-cartoon.html

விண்வெளி ஆராய்ச்சியில் கேலி கூத்தாக பார்க்கப்பட்ட ஒரு நாடு தனது முயற்சியினால் இன்று உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அமெரிக்க கிண்டலுக்கு கார்ட்டூன் Perfect reply to America, who made comment on ISRO through cartoonஇஸ்ரோவை கிண்டலடித்த அமெரிக்காவுக்கு கார்ட்டூன் பதிலடி! | Perfect reply to Am...

05/02/2017
05/09/2015

ஆண்டு விழாவுக்காக அன்று பள்ளி விடுமுறை.சிறுவன் ஒருவன் பள்ளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள பள்ளிக்கு சென்றான்.அங்கு தோரணம் கட்டிக்கொண்டிருந்தனர்.ஊர் மக்கள் எல்லோரும் பள்ளி தலைமையாசிரியருக்கு மரியாதை செலுத்தினர்.இதை பார்த்த சிறுவனுக்கு அடடா உலகிலேயே உயர்ந்த பதவி H.m தான்
என்று நினைத்தான். சிறிது நேரத்தில் D.e.o வந்தார். அவரை பார்த்த H.m ஓடோடி சென்று வரவேற்றார். இதை பார்த்தவன் Deo தான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில்Ceo வந்தார். இதை பார்த்த இருவரும் ஓடிச்சென்று அவரை வரவேற்றனர். அதனால்Ceoதான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் Jd வந்தார். இதை பார்த்த மூவரும் ஓடிச்சென்று வரவேற்றனர். இதை பார்த்தவன் Jdதான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் கல்விஅமைச்சர் வந்தார்.எல்லோரும் சென்று வரவேற்றனர். இதை பார்த்தவனுக்கு கல்விஅமைச்சர் தான் பெரியவர் என்று நினைத்தான். விழா முடிந்ததும் கல்விஅமைச்சர் பக்கத்தில் இருந்த ஒரு சந்தில் நடந்து சென்றார். கூடவே அவர் பின்னால் எல்லோரும் சென்றனர். அவர் அந்த சந்தின் இறுதியில் இருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே இருந்த ஒரு பழைய கட்டிலில் ஒரு முதியவர் படுத்திருந்தார். அவரிடம் அமைச்சர்,''ஐயா! நான் முத்து வந்திருக்கிரேன்'' என்றார். அதற்கு அவர் ,''எந்த முத்து'' என்றார். ''ஐயா உங்கள் வகுப்பில் படித்த முத்து. நீங்க கூட அடிக்கடி குறும்புக்கார பயலே அப்படினு கூப்பிடுவிங்களே.. அந்த முத்து யா இப்போது அமைச்சராய் இருக்கிறேன்.'' என்று சொல்லிக்கொண்டே நெடுஞ்ஞாண் கிடையாக அவர் காலில் விழுந்தார். இதையேல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் 'ஆஹா!! இந்த உலகிலேயே ஆசிரியர்தான் உயர்ந்தவர். அதனால் நானும் நல்லா படித்து ஆசிரியராய் ஆவேன்'' என்று நினைத்துக்கொண்டானாம்.

அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக'கள்.

05/09/2015

ஆசிரியர் தின வாழ்த்துகள்!

ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில், உங்களைச் செதுக்கிய ஆசிரியர்களைப் பற்றி இங்கே பகிர்ந்துகொள்ளுங்களேன்...

ஆசிரியர் தினம்!செப்டம்பர் 5: முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (1888)சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவ...
05/09/2015

ஆசிரியர் தினம்!

செப்டம்பர் 5: முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (1888)

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் செப்டம்பர் ஐந்து 1888 இல் திருத்தணியில் பிறந்தார்.அப்பா வீராசாமி அவர்கள் ஜமீன்தாரிடம் தாசில்தாராக இருந்தார்.பள்ளிக்காலம் திருத்தணியிலும்,திருப்பதியிலும் கழிந்தது.

குடும்பம் வறுமையில் இருந்ததால் அப்பா இவரை கோயில் குருக்களாக போக சொன்னார்.ஆனால் ,கல்வி கற்க வேண்டும் என்கிற ஆர்வம் உந்தித்தள்ளியது இவரை.புத்தகம் வாங்க காசில்லாமல் இவரின் உறவுக்காரர் தத்துவம் படித்து வைத்து இருந்த பழைய புத்தகங்கள் மட்டுமே இருந்ததால் வேலூர் வுர்கிஸ்(VOORHEESE )கல்லூரியில்,பின் சென்னை கிறித்துவ கல்லூரியில் தத்துவம் பயின்றார்.

சென்னை கிறித்துவ கல்லூரியில் பயில்கிற பொழுது ஹாக் எனும் புகழ் பெற்ற பேராசிரியரின் கீழ் "வேதாந்தத்தின் ஒழுக்கவியல் மற்றும் அதன் கருத்தியல் நம்பிக்கைகள் "என்கிற தலைப்பில் ஆழ்ந்த ஒரு கட்டுரையை சமர்ப்பித்தார். மேற்கத்திய தத்துவங்களில் நம்பிக்கை கொண்ட ஹாக் அதை நிராகரிப்பார் என இவர் எதிர் பார்த்தார்.ஆனால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு பிரமாதம் என்றார் ;முதுகலை பட்டம் இவ்வாறு வந்து சேர்ந்தது.

வறுமை வாட்டி எடுத்ததால் கல்லூரியில் பெற்ற பதக்கங்களை அடமானம் வைத்து செலவுகளை சமாளித்து இருக்கிறார் ; தத்துவம் படித்து முடித்த பின் சென்னை மாநில கல்லூரியில் உதவி பேராசிரியராக சேர்ந்ததும் தட்டு வாங்க காசு இல்லாமல் வாழை இலையில் தான் தினமும் உண்டு இருக்கிறார்.வெகு விரைவிலேயே அவரின் இந்தியா தத்துவங்கள் சார்ந்த கட்டுரைகள் உலகம் முழுக்க கவனம் பெற்றன.ஒன்பதே ஆண்டுகளில் மைசூர் பல்கலைகழகம் பேராசிரியராக இவரை பணியமர்த்தியது.மாணவர்களிடம் தலைசிறந்த ஆசிரியர் என பெயர் பெற்றார்

பின் கொல்கத்தாவில் பெருமை மிகுந்த ஐந்தாம் ஜார்ஜ் இருக்கை பேராசிரியர் பதவியில் அமர கிளம்பும் பொழுது குதிரை வண்டியின் குதிரைகளை அவிழ்த்துவிட்டு பிள்ளைகளே வண்டியை இழுத்து சென்றது இவர் எத்தகு ஆசிரியர் என்பதற்கு சான்று..அங்கிருந்து ஹார்வர்ட் ,ஆக்ஸ்போர்ட் முதலிய பல்கலைகழக கூட்டங்களில் இவர் பேசியதை பார்த்து உலகம் வியந்தது.பெர்ட்ரண்டு ரசல் முதலிய உலக மேதைகள் இவரின் மேற்கத்திய மற்றும் கிழக்கின் தத்துவ அறிவை பற்றிய ஆளுமையை கண்டு சொக்கிபோனார்கள் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் பேராசிரியர் பதவியில் நாற்பது வயதிற்குள் அமர்த்தப்பட்டார்.ஆந்திராவின் துணை வேந்தாரகவும் பணியாற்றினார்.பின்பு பனராஸ் ஹிந்து பல்கலைகழக துணை வேந்தர் ஆன பொழுது தான் இவரின் விடுதலை பற்று பலர்க்கு தெரிந்தது.மாரிஸ் ஹல்லேட் எனும் கவர்னர் பனராஸ் ஹிந்து பல்கலைகழக மாணவர்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டதால் அதை போர் மருத்துவமனையாக மாற்ற முயற்சித்த பொழுது அப்பொழுதைய வைஸ்ராயை சந்தித்து அதை தடுத்தார் ;ஆனால் அரசு நிதியுதவி தராது என அறிவித்ததும் தெருத்தெருவாக சென்று நிதி திரட்டி பல்கலைகழகத்தை நடத்தினார்
விடுதலை பெறுவதற்கு முன்னேயே யுனெஸ்கோவுக்கான இந்திய பிரதிநிதி ஆனார் ;இந்திய விடுதலை பெற்றதும் கல்வி கமிஷன் தலைவர் ஆனார் ;கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு யோசனைகளை இவரின் குழு வழங்கியது.விடுதலைக்கு பின் அரசாங்கம் வழங்கிய சர் பட்டத்தை துறந்தார் ;தன்னை முனைவர் என்றே அழைத்தால் போதும் என ஆசிரியர் என்கிற பெருமிதத்தோடு சொன்னார்.

ஸ்ரீனிவாச ராமனுஜம் இங்கிலாந்து கிளம்பும்முன் கப்பலில் இவரை சந்தித்து ஆசி பெற்று இருக்கிறார்;மீண்டும் இருவரும் சந்திக்கவே இல்லை.சர்ச்சில்லின் வெள்ளையின திமிருக்கு குட்டு வைத்து இருக்கிறார் ;"நாங்கள் ஒரே நிறம் ;நீங்கள் பல நிறம் என சர்ச்சில் சொன்ன பொழுது "கழுதைகள் ஒரே நிறம் ,குதிரைகள் பல நிறம் !"என்றார் ;:ஸ்பூனில் சாப்பிடுவதே நாகரீகம் என சொன்ன பொழுது ,"உங்கள் ஸ்பூனில் யார் வேண்டுமானலும் சாப்பிடலாம் ,என் கையில் நான் மட்டுமே சாப்பிட முடியும் "என்றாரே பார்க்கலாம்.

சோவியத் ரஷ்யவின் இந்திய தூதர் ஆனார் ;அப்பொழுது ஸ்டாலினை நேருக்கு நேர் பார்த்து ,"ரத்தம் வழியும் போர் புரிந்து பின் துறவறம் பூண்ட இந்திய அரசர் உண்டு ;நீங்களும் அவ்வாறே ஆவீர்கள் !"என்றார் சிலவருடம் கழித்து கூப்பிட்ட ஸ்டாலின் ,"என்னை மனிதராக நடத்திய முதல் ஆத்மா நீங்கள் தான் !நீங்கள் பல காலம் வாழவேண்டும் !"என வாழ்த்தினார்.

கற்பிப்பதில் தீராத ஆர்வம் கொண்டவர் -ரஷ்யாவின் தூதராக இருந்த காலத்திலும் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் ஆறுமாதம் போய் பாடம் நடத்தி வந்தார்.இந்தியாவின் முதல் குடியரசு துணை தலைவர் ஆனார்.அப்போது அவர் விவாதங்களின் நடுவே தலையிட்டு இந்து புராணங்களில் இருந்தும் ,பைபிளில் இருந்தும் வாசகங்கள் சொல்வார் ,"குடும்ப நிகழ்வு போல சிறப்பாக நடத்துகிறார் என நேரு புகழாரம் சூட்டினார்.

ஜனாதிபதியாக ராஜேந்திர பிரசாத்திற்கு பின் ஆனார் ;தன் சம்பளமான பத்தாயிரத்தில் 2,500 மட்டும் பெற்றுக்கொண்டு மீதத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு கொடுத்து விடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
இவரின் பிறந்தநாளை அரசு கொண்டாட ஆசைப்பட்ட பொழுது அதை ஆசிரியர் தினமாக கொண்டாடலாம் என சொன்னார் .அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் உயிருடன் இருக்கும் பொழுதே அரசு அதை செய்தது தன்னை ஒரு ஆசிரியர் என்பதிலேயே பெருமை கொண்டு இருந்தார்.இந்தியாவின் முதல் பாரத ரத்னாவை சி.வி.ராமன், ராஜாஜி ஆகியோருடன் இவரும் பெற்றுக்கொண்டார்

இவரை நேரு சொன்ன வரிகளில் ஓரளவிற்கு அடக்கலாம் ;"இந்தியாவிற்கு பல்வேறு பதவிகளில் சேவை புரிந்து இருக்கிறார் ;எனினும் ,அவர் ஒரு மாபெரும் ஆசிரியர் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டோம் ,இனியும் கற்றவண்ணம் இருப்போம் ஒரு தத்துவஞானி ,மனிதாபிமானி,கல்வியாளரை இந்த நாடு ஜனாதிபதியாக பெற்றதற்கு பெருமை கொள்கிறது.அதுவே பெரிய மதிப்பு மற்றும் கவுரவம் !"

சமூக சேவை செய்வதில் ஆர்வம் கொண்டு இருந்தார்.ஜி.டி.பிர்லாவுடன் கிருஷ்ணார்பன் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.இன்றுவரை அது சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.இறுதி ஆறு வருடங்களை அமைதியாக தன் சென்னை வீடான கிரிஜாவில் கழித்தார்.

04/01/2015

Wish u happy & prosperous new year...

12/08/2013

கொசுக்களை விரட்ட நாம் என்ன செய்வோம்? hit அல்லது beygon spray உபயோகிப்போம் இல்லாவிடில் allout liquid, goodknight liquid அப்படி எதாவது ஒரு இரசாயனப் பொருட்களை உபயோகிப்போம்.

எங்களிடம் உள்ள இயற்கைப் பொருட்களை வைச்சு எதாவது உபயோகப்படுத்தி இருக்கிறோமா? பதில் கூடுதலாக இல்லை என்றே வரும். இயற்கைப் பொருள்களை உபயோகித்தால் கெளரவக் குறைச்சல் எனற நினைப்பு அதிகமாகியுள்ளது கவலைக்குரியது. அதனால் இயற்கை பற்றி காலங்காலமாக நம் மூதாதையர் அறிந்து வைத்துள்ள அறிவை வரும் சந்ததிகள் இழக்கும் அபாயமும், செயற்கைப் பொருட்களால் ஏற்படும் பல தீங்குகள் பற்றிய விழிப்புணர்வும் அருகிச் செல்கின்றது.

கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரியில் M.Phil., படிக்கின்ற மாணவி கிருஷ்ணவேணி சில மாதங்களா கொசுக்களை விரட்ட வேப்பங்கோட்டை மூலம் மூலிகை மருந்து தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். ஈரோட்டில் 2012ல் நடந்த இளைஞர் அறிவியல் விழாவில், கிருஷ்ணவேணி கண்டுபிடித்த கொசுவை விரட்டும் மூலிகை மருந்து ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது. அதில் முதலாவது பரிசை வென்றார்.

இதைத் தமிழ்நாட்டில் எந்த மீடியாக்களும் சிறு செய்தியாகக்கூட வெளியிடவில்லை. நாமாவது இதை மக்களுக்கு எடுத்துச் செல்வோம் நண்பர்களே.

(பசுமைப் புரட்சி Green Revolution)

Address

Kollampalayam
Erode
638002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Railway colony municipal higher secondary school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share