08/10/2022
பிரமாண்டமான முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடுகை பெருவிழா!
ஆகஸ்ட் 13,
பொறையாறு, தரங்கை பேராயர் மாணிக்கம் கல்லூரியில் 1979 முதல் 1999 வரையிலான 40 வகுப்புகளில் படித்த இயற்பியல் மாணவர்களின் மாபெரும் ஒன்று கூடுகை, பெருவிழாவாக கோலாகலமாக நிகழ்வுற்றது.
Physimeet -22 என்கின்ற இந்த முன்னாள் மாணவர்களின் கூடுகை நிகழ்வில் 700க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கு பெற்று சிறப்பித்தனர்.
ஆலயத்தில் ஆண்டவனின் அருளாசியுடன் ஆரம்பித்த இவ்விழாவின் அடுத்த கட்டமாக மாணவர்கள் மேளதாளத்துடன் விழா அரங்கத்திற்குள் அழைத்து வரப்பட்டனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் பேராசிரியர் ஜீன்ஜார்ஜ் ( Jean George),
முன்னாள் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் தேவதாஸ்,
துறை தலைவர் முனைவர் பேராசிரியர் ஜோப் பிரபாகர், மூத்த ஆசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.
சென்னை பல்கலை கழகத்தின்,முதுகலை படிப்பிற்கான தலைமை பொறுப்பு வகிக்கும் முனைவர் ரீட்டா ஜான் அவர்கள் இம்மாபெரும் கூடுகைக்கு தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார்.
இக்கல்லூரியில் மிக சிறப்பாக பணியாற்றி பணிக்காலத்திலேயே உயிர் இழந்த பேராசிரியர் திரு.வி.எஸ்.சுரேஷ் குமார் அவர்களது உருவப் படத்தை திறந்து வைத்து அவரை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் பிரபல திரை இயக்குனர் திரு சரவண சுப்பையா.
பச்சையப்பன்கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் பேராசிரியர் அருள் மொழி செல்வன், திருவாரூர் திரு.வி.க. கல்லூரி முதல்வர் முனைவர். கோ கீதா, தொழிலதிபர் திரு. இஸ்ரவேல் பிரபாகர், ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் ஆலோசனை சங்க செயலாளரும்,டேனீஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வருமான திரு ஹுபர்ட், மூத்த கல்வியாளரான முனைவர் ரவி மற்றும் நடிகரும் கவிஞருமான திரு.குருமூர்த்தி இக்கல்லூரியுடனான தங்கள் பிணைப்பை பகிர்ந்துகொண்டனர்.
Physimeet சமுதாயத்திற்கு செய்து வரும், மரம் நடும்விழா போன்ற பல நல்ல திட்டங்கள் அவையினர்க்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
மூத்த ஆசிரியர்களிலொருவரான முனைவர் பேராசிரியர் ஜோசப் வேதகிரி நன்றி நவிழ நாட்டுப்ப பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் சுவையான மதிய விருந்து பரிமாறப் பட்டது.
மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு நாள் முழுவதும் காபி,தேநீர்,இளநீர், குடி நீர் இளநீர், வடை, சமோசா போன்றவை பரிமாறப்பட்டன.
திரு.வி.க. கல்லூரி முதல்வர் முனைவர். கோ கீதா தலைமையில் மிர்ரர் என்கின்ற பெயரில் மேடை அமைக்க பட்டு , முன்னாள் மாணவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கப் பட்டனர்.
இந்நிகழ்வுக்கு முத்தாய்ப்பாக 40 வகுப்புகளில் பயின்ற முன்னாள் மாணவர்களும்,தங்கள் வணக்கத்திற்குரிய ஆசிரியர்களின் ஆசிகளைப்பெற்றதும் , அவர்களுடன் புகைப்படமெடுத்துக் கொண்டதும் , ஒரு நெகிழ்வான நிகழ்வு.
ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக இந்த முயற்சி நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக சென்ற ஆண்டு தள்ளிப் போனாலும், விடா முயற்சியால் இந்த ஆண்டு சாத்தியமாகி இருக்கிறது.
இந்நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்களின்
ஒத்துழைப்பு இருந்தாலும், இதனை சாதித்த பெருமை முன்னாள் மாணவர்களையே சாரும். அதிலும் குறிப்பாக திரு. இஸ்ரேல் பிரபாகர், திருபாஸ்டியன்பாபு, திரு. சுரேஷ், திரு.பிரசன்னா ஆகியோரின் உழைப்பும், முயற்சியும் இந்த சாதனை நிகழ்வை சாத்தியமாக்கியது.
கிட்டத்தட்ட 700 மாணவர்கள் அவர்கள் குடும்பத்தினர், சிறப்பு விருந்தினர்கள், கல்லூரி ஆசிரியர்கள் ஊழியர்கள் என்று அனைவரையும் இணைத்து ஒரு அற்புதமான திருவிழா போல நடைபெற்றது.
பொன்விழா கொண்டாடும், பரம்பரியம்மிக்க இந்த தா.பே. மா.லு கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் மேலும் பல்வேறு சாதனகள் படைக்க வாழ்த்துகிறோம்.
பிரமாண்டமான முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடுகை பெருவிழா!ஆகஸ்ட் 13, பொறையாறு, தரங்கை பேராயர் மாணிக்கம் கல்லூரியில் 1...