அரசு தேனி மருத்துவக்கல்லூரி - தமிழ் மன்றம்

  • Home
  • India
  • Theni
  • அரசு தேனி மருத்துவக்கல்லூரி - தமிழ் மன்றம்

அரசு தேனி மருத்துவக்கல்லூரி - தமிழ் மன்றம் எங்கள் மாணவத் தோழமைகளின் மொழி மற்று?

பெண்ணியம் பேசும், நீண்ட கால கண்ணீரின் பதிவு.எழுத்து:தனலட்சுமி அம்மா அவர்கள்
03/10/2020

பெண்ணியம் பேசும், நீண்ட கால கண்ணீரின் பதிவு.
எழுத்து:தனலட்சுமி அம்மா அவர்கள்

என்  காதல் சூழ்நிலையின் இரவலாக, எனை விட்டுப் பிரிந்தாலும்...எனக்கு அவள் வழங்கிய எனக்கான "அன்பின் மொழிகள்", நான் வாழும் வ...
15/07/2020

என் காதல் சூழ்நிலையின் இரவலாக, எனை விட்டுப் பிரிந்தாலும்...எனக்கு அவள் வழங்கிய எனக்கான "அன்பின் மொழிகள்", நான் வாழும் வரை என் "உயிரின் மொழியாக" என் மனதிடம் பேசும் இன்பமும்; அவள் நினைவுகளும், போதும்! என் வாழ்விற்கு...

ஓவியம்:
தனலட்சுமி,
பேராசிரியர் அவர்கள்


   #பிரியாவிடை2k14 batchஎங்கள் அத்துணை அகவல்களுக்கும் உங்கள் இளவல் மனங்களின் நினைவுகளை அன்புடன் பகர்கிறோம்...😍😍😊மனம் அழ😑...
07/05/2020


#பிரியாவிடை
2k14 batch
எங்கள் அத்துணை அகவல்களுக்கும் உங்கள் இளவல் மனங்களின் நினைவுகளை அன்புடன் பகர்கிறோம்...😍😍😊மனம் அழ😑😥 வார்த்தைகளால்....
போய்வரவா...👋👋👋

முழுமையான பதிவுக்கு கீழே படிக்கவும்⬇️⬇️⬇️  #மனிதம் #பூர்ணிமாஎன் குழந்தை கேட்டான்எல்லோருக்கும் கொரொனாவால் விடுமுறையா?ஆம் ...
11/04/2020

முழுமையான பதிவுக்கு கீழே படிக்கவும்⬇️⬇️⬇️

#மனிதம்
#பூர்ணிமா
என் குழந்தை கேட்டான்
எல்லோருக்கும் கொரொனாவால்
விடுமுறையா?
ஆம் எல்லோருக்கும்
ஏன் யாரும் வெளியில் வரக்கூடாது?
கொரொனா பிடிச்சிக்குமா?
ஆம் பிடிச்சிக்கும்
அப்போ எல்லோரும்
வீட்டுக்குள் டீவி பாத்து
விளையாடி
ஸ்னாக்ஸ் சாப்பிட்டு
ஜாலியா இருக்காங்களா???
ஆமா ..அப்டித்தான் இருக்காங்க...
அந்த மலைக்கு அப்றம் என்ன இருக்கு?
காடா?ஊரா?அதுவும் தேனியா?
அந்த மலைக்கு அப்றம்
ஊர் இருக்கு..தேனியோட கிராமம்..
காடு இருக்கலாம்..வயலோ தோப்போ இருக்கலாம்
அங்கயும் எல்லோரும் இப்டித்தான்
இருக்காங்களா?
விளையாடிகிட்டே,டீவி பாத்துட்டே..
கை கழுவிட்டே..சாப்டுட்டே...
ஹேப்பியா இருக்காங்களா?
தெரியல ராஜா...
வேலை இல்லாதவங்க,
சாப்பாடு இல்லாதவங்க,
அப்பா அம்மா இல்லாதவங்க,
குழந்தை இல்லதவங்க,
வீடு இல்லாதவங்க..
இருக்காடா இந்த உலகத்துல..
ஹோம்லெஸ் ஆ ம்மா
அவங்க என்ன பண்ணுவாங்க?
தெரியல கண்ணா...
யாராச்சும் தினமும்
அன்ன தானம் பண்னுவாங்க ..
கவர்ன்மெண்ட் கொஞ்சம் பணமும்
சாப்பாடு செய்ய சாமானும் தர்ராங்க டா..
அப்போ இந்த உலகத்துல
நெறயா தெரியாத உலகம்
இருக்கா ம்மா...
ஆமாடா தங்கம் ...
அப்போ கொரொனா போயிட்டா
அவங்களுக்கு எல்லாம் கெடைக்குமா ம்மா?
தெரியாது ராஜா...
இந்த உலகத்துல
தெரியாத உலகம்
நெறயா இருக்கு...

10/03/2020

 #மகளிர்தினம் #கவிதை #இன்றொருநாள்மட்டும் #துகிராஇன்றொரு நாள் மட்டும்!விடியற்பொழுது அனுதினமெனினும்வர்ணனை இன்றொரு நாள் மட்...
08/03/2020

#மகளிர்தினம்
#கவிதை
#இன்றொருநாள்மட்டும்
#துகிரா

இன்றொரு நாள் மட்டும்!
விடியற்பொழுது அனுதினமெனினும்
வர்ணனை இன்றொரு நாள் மட்டும்!
அஸ்தமம் அனுதினமெனினும்
தீமை தவிர்த்தல் இன்றொரு நாள் மட்டும்!
தேய்பிறை வளர்ப்பிறை இயற்கையெனினும்
பாகுபாடின்றி பெளர்ணமியாய்
எட்டுத்திக்கும் ஒளிரச்செய்யும் மாயை
இன்றொரு நாள் மட்டும்!
சுயநலம் அற்று சக்கரங்கள் கட்டி
உற்றார் சுற்றத்தார்க்கு சுழன்றும்
அணங்கென்று ஆராதனைகள்
இன்றொரு நாள் மட்டும் !
சதைப்பிண்டமாய் மாற்றி அனுதினம்
அவள் அகத்தில் ஆறாத வடுக்களுக்கு
ஆறுதல் எழுச்சி ஔடதம்
இன்றொரு நாள் மட்டும்!
அழகென்ற வர்ணனைகள், வன்புணர்ச்சிகள் என்ற
பேரிருளில் தள்ளிவிட்டு
விழித்தெழு விண்ணைத்தொடு என்ற
வெளிச்சமற்ற விடியல் பாதையில்
விளக்கொன்றை ஏற்றி வைத்தாற்போன்ற மாயை
இன்றொரு நாள் மட்டும்!
பெண்ணியம் கண்ணியம் சமத்துவம்
பெண்மை தாய்மை தூய்மை
இன்னும் எத்தனையோ !!-அத்துனையும்
இன்றொரு நாள் மட்டும்!
விடுதலை சிந்தைகளும்
வித்திடும் எழுத்துரிமையும்
அதன் வாசகற் பெருங்கோடியும்
இன்றொரு நாள் மட்டும்!
ஏனென்றால் உலக மகளிர் தினமாம்
இன்றொரு நாள் மட்டும்!
--துகிரா

விழித்தெழுந்திடுங்களேன்!
இது இன்றொரு நாளுக்கானது அல்ல!
இந்த புரிதல் இன்றோடு முடிவதற்கல்ல
காலத்தால் மெருகேற்றப்பட வேண்டியது!

 #கேலிச்சித்திரம் #1 #கீர்த்தனா முதலாம் ஆண்டு மருத்துவம்
19/08/2019

#கேலிச்சித்திரம்
#1
#கீர்த்தனா முதலாம் ஆண்டு மருத்துவம்

எங்கள் பேராசிரியர் திரு.எழிலரசன் அவர்கள்.உங்கள் மாணவ-மாணவிகளின் வாழ்த்துக்கள்.
10/08/2019

எங்கள் பேராசிரியர் திரு.எழிலரசன் அவர்கள்.
உங்கள் மாணவ-மாணவிகளின் வாழ்த்துக்கள்.

விழித்தெழுங்கள் மக்களே
10/08/2019

விழித்தெழுங்கள் மக்களே



Address

Theni
625534

Alerts

Be the first to know and let us send you an email when அரசு தேனி மருத்துவக்கல்லூரி - தமிழ் மன்றம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share