05/04/2023
#நெகிழும்___நோன்பு:
உண்ணுவது, பருகுவது, உடலுறவைத் தவிர்ப்பது தான் நோன்பு என்பதாக எண்ணிக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால் அது இறைக் காதலர்களின் சங்கமம் என்பதை நாம் புரிய வேண்டும்.
தன் காதலனாகிய அல்லாஹ்விடம் வந்த திடீர் அழைப்பு ஹள்ரத் மூஸா அலைஹி ஸலாம் அவர்களைக் கிரங்கச் செய்தது.
ஆசை தீர உரையாடி மகிழ்ந்தார்கள்.
உரையாடல் முடிந்ததும் அவர்களின் காதல் அதிகமாகி விட்டது.
எப்படியாவது தன் காதலனாகிய அல்லாஹ்வைப் பார்த்து விட வேண்டும் என்று துடித்தார்கள்.
அது நடைபெறாமல் போக போக அவர்களின் ஏக்கம் அதிகமாகிக்கொண்டே சென்றது.
ஒரு நாள் அவனிடம் நேரடியாகவே கேட்டு விட்டார்கள்.
(ரப்பி அரினி அன்ளுரு இலைக்!)
எனது இறைவா!
உன்னை என் கண்களுக்கு காட்டித்தா„ என்றார்கள்.
(லன் தரானி)
உன் கண்களால் என்னைக் காண இயலாது,,
என்று அல்லாஹ் பதிலளிதவதுப் பார்த்தான்.
ஆனால் ஹள்ரத் மூஸா அலைஹி ஸலாம் அவர்கள் அடம்பிடிக்க ஆரம்பித்தார்கள்.
"மூஸாவே! இதோ பார்! நான் சொன்னால் கேள்!
உன்கண்களுக்கு என்னை பார்க்கும் ஆற்றல் இல்லை.
இதோ பார்! இந்த மலையின் மீது என்னுடைய காட்சியை ஒளிக்கீற்றளவு காட்டுகிறேன்.
என்ன நடக்கிறது என்று பார்! என்று அல்லாஹ் கூறினான்.
அருட்பெருஞ் ஜோதியாக அல்லாஹ்வின் ஒளிக் கீற்று மலையில் பட்டதும். மலை சுக்கு நூறாக உடைந்து சிதறியது.
அந்த ஒளிக் கீற்றைப் பார்த்துக் கொண்டிருந்த ஹள்ரத் மூஸா அலைஹி ஸலாம் அவர்கள் மூர்ச்சையானார்கள்.
மூர்ச்சை தெளிந்து எழுந்த பின்னரும் ஹள்ரத் மூஸா அலைஹி ஸலாம் அவர்களுக்கு வேட்கை தீரவில்லை.
" சரி உன்னைப் பார்க்கத் தான் முடியாது என்று கூறிவிட்டாய்!
இன்னொரு முறை என்னிடம் பேசவாவது செய்யேன்! என்று வேண்டி நின்றார்கள்.
அதற்கு அல்லாஹ் என்ன மறு மொழி பகர்ந்தான் தெரியுமா?
முப்பது நாட்கள் நோன்பிருந்து வா! என்றான்.
ஆசையோடு முப்பது நாட்கள் நோன்பை நிறைவேற்றி முடித்த அவர்கள், மறு நாள் குளித்து, பல் துலக்கி, நறுமணம் பூசி,புத்தாடை அணிந்து குதூ குலத்தோடு.
தன் காதலனோடு உரையாட சென்றார்கள்.
நான் உன்னை நோன்பு வைத்த நிலையில் தானே என்னைச் சந்திக்க வரச் சொன்னேன்.
நீர் நோன்பை முடித்து விட்டு, நோன்பை முடித்து விட்டு , நோன்பு நோற்காத நிலையில் வந்திருக்கிறீரே!
சரி மீண்டும் சென்று இன்னும் பத்து நாள் நோன்பு நோற்று கடைசி நாள் நோன்பு நோற்ற நிலையிலேயே வாரும்.
உன்னிடம் உரையாடுகிறேன். என்று அல்லாஹ் கூறி இழுத்தடித்தான்.
உத்தரவுப் பிரகாரம் இன்னும் பத்து நாள் நோன்பு வைத்து, நோன்பிருந்த நிலையிலேயே தன் காதலனாகிய அல்லாஹ்விடம் ஹள்ரத் மூஸா அலைஹி ஸலாம் அவர்கள் உரையாடி இன்புற்றதாக.
திருக்குர்ஆன் (7:143) கூறுகிறது.
ஆம்...!
நோன்பு இறைக் காதலின் சக்கமம்தான்.
S. முஹம்மது சுலைமான் அலி.
கைரி......வாழூர்.