04/09/2023
உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள இத்தருணம் பல மாணவர்களிற்கு மகிழ்ச்சியாகவும் சிலருக்கு ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருக்கலாம்.
இந்நிலை மாணவர்களிற்கு மட்டுமன்றி பெற்றோருக்கும் பொதுவானது எனக் கூறலாம்.
இவ் உயர் தரப் பரீட்சைப் பெறுபேற்றின் ஆகக் குறைந்த எதிர்பார்ப்பாய் இருப்பது குறித்த பிரிவில் 3 பாடங்களிலும் சித்தியடைவது. ஆகக் கூடிய எதிர்பார்ப்பாய் அமைவது குறித்த பிரிவில் ஆகக் கூடிய துறை சார்ந்த கற்கை நெறியைப் பெற்றுக் கொள்வது.
எதிர்பார்ப்புக்கள் எப்படியிருப்பினும் அனைவரினதும் சாதாரண எதிர்பார்ப்பு என்பது, பல்கலைக்கழக நுழைவு.
பல்கலைக்கழக நுழைவுக்கு போதுமான பரீட்சைப் பெறுபேறுகள் கிடைக்கவில்லையெனின் எதிர்காலமே இல்லை என்றும் தானும் அடுத்தவர்களைப் போல ஓர் பட்டதாரியாக முடியாது என்று எண்ணி மன அழுத்தங்களிற்கு ஆட்படும் நிலைமையும் ஓர் காலகட்டத்தில் காணப்பட்டன.
ஆனால் தற்போது நிலைமை அவ்வாறில்லை. இன்று நம் நாட்டில் உயர்கல்வியை வழங்கும் பல தகுதியான தனியார் கல்வி நிறுவனங்கள் பல காணப்படுவதால் மாணவர்களின் உயர் கல்விக்கு பல வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
அந்த வகையில் *Seashore Global Campus* ஆனது மாணவர்களிற்கான உயர்கல்விக்கான பயணத்தின் கலங்கரைவிளக்கமாக திகழ்கிறது.
பல்கலைக்கழக நுழைவுக்கு போதுமான பெறுபேறுகள் இல்லாத மாணவர்களும் பட்டதாரியாருவதற்கான வாய்ப்பை *Seashore Global Campus* வழங்குகின்றது.
உயர்தரத்தில் ஏதாவது ஒரு துறையில் 3 பாடங்களிலும் ஆகக் குறைந்தது S சித்திகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களும் 2 பாடங்களில் மாத்திரமே சித்தி பெற்ற மாணவர்கள் அடுத்த அமர்வில் குறிப்பிட்ட பாடத்தில் சித்தியைப் பெற்றுத்தரும் உடன்பாட்டுடனும் விண்ணப்பிக்கலாம்.
பல்கலைக்கழகம் நுழைபவர்கள் மாத்திரம் தான் பட்டதாரியாகலாம் என்பது பல வருடங்களிற்கு முன்பு உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று நீங்கள் உலகத்தில் எப்பாகத்திலிருப்பினும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே உயர்கல்வியைக் கற்று பட்டதாரியாகும் வாய்ப்பை வழங்கும் விதமாக இன்றைய உலகம் பாரிய தொழில்நுட்ப வளர்ச்சி கண்டுள்ளது.
பல்கலைக்கழகம் ஒரு மாணவனின் ஆளுமை விருத்திக்கான களமாக இருக்கின்றதேயன்றி, பல்கலைக்கழக நுழைவு தவறும் பட்சத்தில் ,பட்டதாரியாகும் வாய்ப்பும் தவறிவிடுகிறது என்று கூறி விட முடியாது.
ஒவ்வோர்வரின் முயற்சிக்குத் தகுந்த வாய்ப்புக்களையும் அடைவுகளையும் காலம் நிச்சயம் தன்னுள் வைத்திருக்கும். ஆகவே முயற்சி செய்து கொண்டே இருங்கள், பலனைப் பெற்றுக் கொள்வீர்கள்!
உயர்கல்வி வழிகாட்டல் , மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக் கொள்ள SGC ஐ தொடர்பு கொள்ளுங்கள்.