Al Manar National School Handessa.

Al Manar National School Handessa. Rabbi Zidhni Ilma....

பாடசாலைச் சம்பவத் திரட்டுப் புத்தகம் (Log Book): பற்றிய தகவல்கள்.பாடசாலைச் சம்பவத் திரட்டுப் புத்தகம் என்பது ஒரு பாடசாலை...
03/02/2026

பாடசாலைச் சம்பவத் திரட்டுப் புத்தகம் (Log Book): பற்றிய தகவல்கள்.

பாடசாலைச் சம்பவத் திரட்டுப் புத்தகம் என்பது ஒரு பாடசாலையின் இதயம் போன்றது. இது வெறும் பதிவேடு மட்டுமல்ல; பாடசாலையின் வரலாற்றுப் பதிவாகவும், சட்ட ரீதியான ஆவணமாகவும் கருதப்படுகிறது. இதில் பதியப்படும் ஒவ்வொரு விடயமும் துல்லியமாகவும், கால வரிசைப்படியும் இருப்பது அவசியமாகும்.

முக்கியமான மூன்று (03) பிரிவுகள்
சம்பவத் திரட்டுப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களை இலகுவாகப் புரிந்துகொள்ள அவற்றை மூன்று பிரதான பிரிவுகளாக வகைப்படுத்தலாம்:

பிரிவு 1: நிர்வாகம் மற்றும் பணியாளர் விபரங்கள்
இப்பிரிவு பாடசாலையின் கட்டமைப்பு மற்றும் மனிதவளம் சார்ந்த மாற்றங்களை உள்ளடக்கும்:

* நிர்வாக முடிவுகள்: பாடசாலை முகாமைத்துவக் குழு (SMC) அல்லது நிர்வாகம் எடுக்கும் விசேட கொள்கை முடிவுகள்.

* பணியாளர் மாற்றங்கள்: ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு, ஓய்வுபெறுதல் மற்றும் தற்காலிக இடைநீக்கம்.

* விடுமுறை விபரங்கள்: பணியாளர்கள் வெளிநாட்டுப் பயணம் அல்லது உயர்கல்விக்காக (Study Leave) நீண்டகால விடுமுறை பெற்றுச் செல்லுதல் மற்றும் மீண்டும் பணியில் இணைதல்.

பிரிவு 2: நிகழ்வுகள் மற்றும் கடமைகள்
பாடசாலையின் அன்றாட மற்றும் விசேட செயற்பாடுகள் இதில் அடங்கும்:

* மாணவர் சார் நிகழ்வுகள்: மாணவர் தலைவர்கள் தெரிவு, விசேட சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவித்தல்.

* விழாக்கள்: வருடாந்த பரிசளிப்பு விழா, இல்ல விளையாட்டுப் போட்டி, கலை விழாக்கள் மற்றும் மத வழிபாட்டு நிகழ்வுகள்.

* பரிசோதனைகள்: பாடசாலைப் பெறுபேறுகள் மற்றும் தர மதிப்பீட்டுப் பரிசோதனைகள் பற்றிய சுருக்கம்.

பிரிவு 3: பிரச்சினைகள் மற்றும் அவசர நிலைகள்
இப்பிரிவு சட்ட ரீதியான முக்கியத்துவம் வாய்ந்தது:

* விசேட பிரச்சினைகள்: பாடசாலைச் சொத்துக்கள் திருடப்படுதல், பாரிய ஒழுக்காற்று மீறல்கள், அல்லது எதிர்பாராத மரணங்கள்.

* பணியாளர் விபத்துக்கள்: ஒரு ஊழியர் பணிக்கு வரும்போது, பணியில் இருக்கும்போது அல்லது பணியை முடித்துத் திரும்பும்போது ஏற்படும் விபத்துக்கள் (Duty Accidents). இது காப்புறுதி மற்றும் இழப்பீடு பெற மிக அவசியம்.

மேலதிகமாக உள்ளடக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்கள்
பதிவின் நம்பகத்தன்மையை அதிகரிக்க பின்வரும் விடயங்களையும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்:

* அதிகாரிகளின் விஜயம் (Supervision): வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அல்லது அமைச்சு அதிகாரிகள் பாடசாலைக்கு வருகை தந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அது பற்றிய குறிப்புகளைப் பதிய வேண்டும்.

* கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு: புதிய கட்டிடங்கள் திறப்பு அல்லது பாரிய திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட விபரங்கள்.

* அனர்த்தங்கள்: வெள்ளம், கடும் காற்று அல்லது இயற்கை அனர்த்தங்களால் பாடசாலைக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விடுமுறை அறிவிப்புகள்.

* சுகாதார அவசரநிலைகள்: பாடசாலையில் பரவக்கூடிய தொற்றுநோய்கள் அல்லது விசேட மருத்துவ முகாம்கள் பற்றிய தகவல்கள்.

பதிவுகளை மேற்கொள்ளும்போது கவனிக்க வேண்டியவை:

* காலநேரம்: சம்பவங்கள் நடந்த உடனே அல்லது அன்றைய தினமே பதியப்பட வேண்டும்.

* கையப்பம்: பதிவுகளை மேற்கொண்ட பின் அதிபர் அல்லது பொறுப்பான அதிகாரி ஒப்பமிட்டு முத்திரையிட வேண்டும்.

* திருத்தங்கள்: பதிவுகளில் தவறு ஏற்பட்டால் அதனைத் திருத்த 'வைட்னர்' (Whitener) பயன்படுத்தக் கூடாது. ஒரு கோட்டினால் அடித்துவிட்டு அருகில் கையொப்பமிட வேண்டும்.

Abdur Raheem Ahamed

28/05/2025
30/09/2023
20/07/2023

நினைவுகளால் மட்டுமே நிறைந்திருக்கும் பள்ளி வாழ்க்கையின் பொக்கிஷமான நிமிடங்களை நிஜங்களாக்கி எங்கள் உயிரான தோழமைகளோடு ஒன்றாய் உறவாட...

அன்னையின் மடியில் மீண்டும் மழலையாய்‌த் தவழ‌ ஆவலுடன் இருக்கும் நாம்...

ஏக்கமும் தோழமையும் கொண்ட நம் நட்புப் பயணத்தைத் தொடர்வோம்!

பழைய மாணவிகள் சங்கம்,
அல்மனார் தேசிய பாடசாலை,
ஹந்தெஸ்ஸ.

23/01/2023

Cartoon by Sajith Bandara

Get ready boys…!It’s 4th & 5th
07/01/2023

Get ready boys…!
It’s 4th & 5th

Address

Kandy

Telephone

+94812315807

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Manar National School Handessa. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share