Jamiah Manarul Hudha

Jamiah Manarul Hudha Islamic College of General Studies

எமது கல்லூரியிலிருந்து 2025ஆம் ஆண்டு கல்வியாண்டில் வெளியேறிய மாணவர்களும், அவர்களது நண்பர்களும் இணைந்து, கல்லூரியின் தேவை...
22/06/2026

எமது கல்லூரியிலிருந்து 2025ஆம் ஆண்டு கல்வியாண்டில் வெளியேறிய மாணவர்களும், அவர்களது நண்பர்களும் இணைந்து, கல்லூரியின் தேவைகளைக் கருத்திற்கொண்டு ஒரு புதிய ஒலிபெருக்கி (Sound System) தொகுதியை சதகத்துல் ஜாரியாவாக அன்பளிப்புச் செய்துள்ளனர். நீண்டகாலமாக தங்களது மனதில் இருந்த இந்த நற்சிந்தனையை செயல்படுத்தும் முகமாக அவர்கள் வழங்கியுள்ள இந்த பெறுமதிமிக்க அன்பளிப்பு, கல்லூரியின் கல்வி, மார்க்க மற்றும் பொதுநிகழ்ச்சிகளை மேலும் சிறப்பாக நடத்துவதற்கு பெரும் துணையாக அமைகின்றது.

குறித்த ஒலிபெருக்கி தொகுதி, கல்லூரி அதிபர் மற்றும் பிரதியதிபர் அவர்களின் ஊடாக உத்தியோகபூர்வமாக கல்லூரியிடம் கையளிக்கப்பட்டது. மாணவர்கள் தாங்கள் கல்வி கற்ற நிலையத்தின் வளர்ச்சியிலும் தேவைகளிலும் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகின்றார்கள் என்பதற்கு இந்த அன்பளிப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தங்களது சொந்த முயற்சியாலும், நண்பர்களின் ஒத்துழைப்பாலும் இந்த நற்செயலை முன்னெடுத்து, கல்லூரிக்கு பயனுள்ள ஒரு நிரந்தரப் பங்களிப்பை வழங்கியுள்ள 2025 ஆம் ஆண்டு வெளியேறிய மாணவர்களுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எமது கல்லூரி சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அல்லாஹுதஆலா அவர்களது இந்த சதகத்துல் ஜாரியாவை ஏற்றுக்கொண்டு, இதன் நன்மைகளை அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வழங்கி, அவர்களது கல்வி, தொழில் மற்றும் வாழ்வில் பரக்கத்தையும் வெற்றியையும் அருள்வானாக. ஆமீன்.

جزاكم الله خيراً
JAMIAH MANARUL HUDHA
college

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹுபுனித அல்குர்ஆனை தஜ்வீத் முறையில் சரியாக ஓதும் திறனை மாணவர்களிடம் வளர்க்கும் ந...
22/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

புனித அல்குர்ஆனை தஜ்வீத் முறையில் சரியாக ஓதும் திறனை மாணவர்களிடம் வளர்க்கும் நோக்கில், தஜ்வீத் பாடத்தின் அனைத்து சட்டங்களும், விளக்கங்களும் உள்ளடங்கிய பேனர்(banner) இன்று எமது ஹிப்ழ் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

الحمد لله

இந்நிகழ்வில், எமது கல்லூரியின் உப அதிபர் அவர்கள் குறித்த (banner)பேனர்களை மாணவர்களின் கைகளில் வழங்கி வைத்தார். மாணவர்கள் தஜ்வீத் விதிகளை எளிதில் நினைவில் வைத்துக் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு இப்பேனர்கள் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லாஹ்வின் வார்த்தைகளை அழகாகவும், சரியான முறையிலும் ஓதும் தலைமுறையை உருவாக்கும் இத்தகைய கல்விசார் முயற்சிகள் தொடர்ந்தும் சிறப்புற நடைபெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.

21.06.2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ 📚 2026 அரையாண்டுப் பரீட்சை ஆரம்பம் 📚எமது கல்லூரியின் அரையாண்டுப் பரீட்ச...
21/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

📚 2026 அரையாண்டுப் பரீட்சை ஆரம்பம் 📚

எமது கல்லூரியின் அரையாண்டுப் பரீட்சை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ் ✨

மாணவர்கள் தாம் கற்ற அறிவையும் தமது திறமைகளையும் வெளிப்படுத்தும் முக்கியமான சந்தர்ப்பமாக இப்பரீட்சை அமைகின்றது. கல்விப் பயணத்தில் மேலும் முன்னேறுவதற்கான ஒரு படிக்கல்லாகவும் இது திகழ்கின்றது.

இப்பரீட்சையில் தோற்றும் அனைத்து மாணவர்களும் சிறந்த முறையில் பரீட்சைகளை எழுதி, உயர்ந்த பெறுபேறுகளையும் வெற்றிகளையும் பெற்றுச் சித்தியடைய எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம்.

அனைத்து மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். அல்லாஹ் உங்கள் முயற்சிகளைப் பொருந்திக் கொண்டு சிறப்பான வெற்றியை அருள்வானாக. ஆமீன். 🤲

*_تقبل الله منكم، أحياكم الله لأمثاله كل عام وأنتم بخير*_Muharam #
16/06/2026

*_تقبل الله منكم، أحياكم الله لأمثاله كل عام وأنتم بخير*_

Muharam #

2026-06-12 #Jummah Mubarak
11/06/2026

2026-06-12 #
Jummah Mubarak

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.எமது கல்லூரியில், தும்மலசூரிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளி...
08/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

எமது கல்லூரியில், தும்மலசூரிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளின் பங்கேற்புடன் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் மூலம் மாணவர்களுக்கு போதைப்பொருளின் ஆபத்துகள், அதன் சமூக விளைவுகள் மற்றும் அதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து பயனுள்ள விளக்கங்கள் வழங்கப்பட்டன.

அல்ஹம்துலில்லாஹ்

இந்நிகழ்வை நடாத்திய தும்மலசூரிய பொலிஸ் பிரிவினருக்கு எமது கல்லூரி சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

2026/06/08

05/06/2026
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!“மாணவர்களுக்கு சிறந்த குடிநீர் வசதிகளை வழங்க வேண்டும்” என்ற எமது MHP திட்டத்தின் கீழ், அல்...
28/05/2026

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!

“மாணவர்களுக்கு சிறந்த குடிநீர் வசதிகளை வழங்க வேண்டும்” என்ற எமது MHP திட்டத்தின் கீழ், அல்குர்ஆன் மனனப் பிரிவிற்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிக்காக, பெயர் சொல்ல விரும்பாத நன்மையை நாடும் ஒரு சகோதரரின் ஸதகத்துல் ஜாரியாவாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த உதவியை எந்த நல்ல நோக்கத்திற்காக வழங்கினார்களோ, அந்த நோக்கத்தை அல்லாஹ் நன்கறிந்தவன். அவர்களுக்கு இதன் நற்கூலியை முழுமையாக வழங்கி, இம்மையிலும் மறுமையிலும் பரக்கத் அருள்வானாக என்று முழு மனதுடன் பிரார்த்திக்கிறோம்.

அல்லாஹ் அவர்களின் ஸதகாவை ஏற்றுக்கொண்டு, இதனை ஸதகத்துல் ஜாரியாவாக நிலைத்திருக்கச் செய்வானாக. ஆமீன்.

அல்லாஹ் உங்கள் தியாகங்களையும் நற்செயல்களையும் ஏற்றுக்கொண்டு, உங்கள் குடும்பத்திற்கு அமைதி, ஆரோக்கியம் மற்றும் பரக்கத்தை ...
27/05/2026

அல்லாஹ் உங்கள் தியாகங்களையும் நற்செயல்களையும் ஏற்றுக்கொண்டு, உங்கள் குடும்பத்திற்கு அமைதி, ஆரோக்கியம் மற்றும் பரக்கத்தை அருள்வானாக.
ஈதுல் அத்ஹா திருநாள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நன்மைகளும் நிறைந்த நாளாக அமையட்டும்.

தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!

JAMIAH MANARUL HUDHA
DIVURUMPOLA-Ethungahakotuwa
Sir Lanka

Address

Divurumpola, Ethungahakotuwa
Kuliyapitiya
60266

Opening Hours

Monday 08:00 - 13:40
Tuesday 08:00 - 13:40
Wednesday 08:00 - 13:40
Thursday 08:00 - 13:40
Sunday 08:00 - 13:40

Telephone

+94322241474

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamiah Manarul Hudha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share