Kashiful Uloom Arabic College - Nintavur

Kashiful Uloom Arabic College - Nintavur Estd : 21.10.1981

14/07/2024
ஸதகா ஜாரியாவாக இரண்டு கணணி திரை,  மவுஸ்,  கீ போர்டு ஆகியன வழங்கி வைப்பு அல் ஹம்துலில்லாஹ்!நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக...
14/07/2024

ஸதகா ஜாரியாவாக இரண்டு கணணி திரை, மவுஸ், கீ போர்டு ஆகியன வழங்கி வைப்பு

அல் ஹம்துலில்லாஹ்!

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் வரலாற்றில் முதன் முதலாக கணணி பாடநெறி NVQ Level 3 ஆரம்பிக்கப்பட்டு அது சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் செயற்பாட்டு ரீதியான கற்பித்தலுக்கு தேவையான கணனி வசதிகள் இன்மையால் இங்கு கல்வி பயிலும் எதிர்கால உலமாக்களான ஆலிம்கள் அவதியுறும் நிலைமையினை அவதானிக்க முடிந்தது.

அந்த வகையில் இதற்கு தேவையான கணினி வசதியை பெற்றுத் தருமாறு வேண்டிக் கொண்டதற்கிணங்க,

கணணிக்குரிய இரண்டு கணணி திரை, மவுஸ், கீ போர்டு ஆகியனவற்றை இலங்கை இறைவரி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எம் முஸ்ஸம்மில் ஸதகா ஜாரியாவாக பெற்றுத் தந்துள்ளார்

வல்ல அல்லாஹ் இதற்காக உதவிய சகோதர உள்ளங்களின் செல்வத்தில் மென்மேலும் பBறக்கத் செய்வதோடு, ஸதகா ஜாரியா என்ற நிரப்பமான கூலியினை ஈருலகிலும் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.

ஆமீன்

இதுபோன்று சதகா ஜாரியாவாக நீங்களும் தர்மம் செய்ய விரும்பினால் இறை வேதத்தை சுமக்கும் உலமாக்களை உருவாக்குகின்ற பொறுப்பு வாய்ந்த சமய ஸ்தாபனமாகிய நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்:

076 010 4489
075 161 4808

Account number:

Kashiful Uloom Arabic College
0010117513002
Amana bank
Ninthavur branch

Message kashiful uloom Arabic college on WhatsApp. https://wa.me/94723171171

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் ஷரிஆ பிரிவு மாணவர்களுக்கு கணினி மேசை தேவையாக உள்ளது..வபாத்தான உங்களது உறவுகள...
10/07/2024

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் ஷரிஆ பிரிவு மாணவர்களுக்கு
கணினி மேசை தேவையாக உள்ளது..

வபாத்தான உங்களது உறவுகளின்பெயரால்
ஸதகா ஜாரியாவாக தந்துதவுங்கள்....


அல்லாஹ்வுடைய பாதையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு முடியுமான சகோதர உள்ளங்கள் இதனை அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நன்கொடையாக வழங்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

எமக்கு நான்கு கணனி மேசை தேவையாக உள்ளது.
(12000 x 4 = 48,000/=)

ஒரு கணினி மேசையின் பெறுமதி: 12,000.00

தாங்கள் அன்பளிப்பு செய்யும் பணத்தை மத்ரஸா Account மூலமோ, நேரடியாகவோ வழங்க முடியும்.

இது பற்றிய மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள அழையுங்கள்.

076 010 4489
075 161 4808

Account number:

Kashiful Uloom Arabic College
0010117513002
Amana bank
Ninthavur branch

Message kashiful uloom Arabic college on WhatsApp. https://wa.me/94723171171

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு  பஹவந்தலாவ ராஹுல தேரர் நல்லென்ன விஜயம்.நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூ...
08/07/2024

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு பஹவந்தலாவ ராஹுல தேரர் நல்லென்ன விஜயம்.

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு இலங்கை ஐக்கிய சமாதான அமைப்பின் தலைவர் பலாங்கொடை விகாராதிபதி சங்கைக்குரிய பஹவந்தலாவ ராஹுல தேரர் நேற்று 2024.07.07 மத நல்லிணக்க அடிப்படையிலான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இவரது மதம் கடந்த மனித நேய பயணத்தின் ஓர் அங்கமாக அமையப் பெற்ற இந்த விஜயத்தின் இங்கு கல்வி பயிலும் மௌலவி மாணவர்களுடன்
சமூக ஒற்றுமைக்கான சிறப்புக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி ஆளுநர் சபையின் உப தலைவர் அல் ஹாஜ் ஏ எம் இப்றாகீம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பலாங்கொடை விகாராதிபதி சங்கைக்குரிய பஹவந்தலாவ ராஹுல தேரருடன் சங்கைக்குரிய மௌலவி பேஷ்இமாம் அல்ஹாபிழ் ஏ பி சிம்லி, நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் செயலாளர் ஏ புஹாது, இணைச் செயலாளர் அல் ஹாஜ் யூ அப்துல் வாஹிட், கல்லூரி அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நாட்டில் இன நல்லுறவை கட்டியெழுப்பும் வகையில் மதம் கடந்து மனித நேய பணிகளை மேற்கொண்டு வரும் பலாங்கொடை விகாராதிபதி சங்கைக்குரிய பஹவந்தலாவ ராஹுல தேரரின் பாராட்டி நினைவு சின்னம் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு.

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் அல்-குர்ஆன் மனனப் பிரிவு மாணவர்களுக்கான வாராந்த தர்பியா நிகழ்வு.2024.07.04இன...
05/07/2024

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் அல்-குர்ஆன் மனனப் பிரிவு மாணவர்களுக்கான வாராந்த தர்பியா நிகழ்வு.
2024.07.04

இன்று எமது அரபுக் கல்லூரியின் அல்-குர்ஆன் மனனப் பிரிவு மாணவர்களுக்கான வாராந்த தர்பியா நிகழ்வு மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

அதில் மதிப்புக்குரிய அல் ஹாபிழ் மெளலவி எம்.எஸ்.எம். பாரிஸ் (ஸஹ்ரி) அவர்கள் சொற்பொழிவாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வில் அம்மாணவர்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஊடகப் பிரிவு

அல் பBஷாயிர் அமைப்பினால் நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு துவிச்சக்கர வண்டி அன்பளிப்புBy editor அல் பBஷாயிர் ...
03/07/2024

அல் பBஷாயிர் அமைப்பினால் நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு

By editor

அல் பBஷாயிர் சமூக சேவைகள் அமைப்பினால் நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு ஸதகா ஜாரியாவாக துவிச்சக்கர வண்டி அன்பளிப்புச் செய்யப் பட்டுள்ளது

இவ் அரபுக் கலாபீடத்தின் மத்ரஸா ரீதியான வெளித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வசதியாக இந்த துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டுள்ளது

இக் கையளிப்பு நிகழ்வில் அல் பBஷாயிர் சமூக சேவை அமைப்பின் தலைவர் சங்கைக்குரிய மௌலவி அல்ஹாபிழ் ஏ எம் சிம்லி ஆதம் கலந்து கொண்டு துவிச்சக்கர வண்டியை வழங்கி வைத்தார்.

இதற்காக உதவிய ஒத்துழைத்த சகோதரர்களின் செல்வத்திலும், வாழ்விலும் அல்லாஹ் பறக்கத் செய்ய வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

ஊடகப் பிரிவு

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியில்  ஷரீஆ பிரிவு முதல் வருட  மாணவர்களுக்கு பிரயோக ரீதியான   செயன்முறை கற்றல்...!...
02/07/2024

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியில் ஷரீஆ பிரிவு முதல் வருட மாணவர்களுக்கு பிரயோக ரீதியான செயன்முறை கற்றல்...!!

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியில் முதலாம் வகுப்பு (ஷரீஆ பிரிவு) மாணவர்களுக்கான பிரயோக ரீதியான கற்றல் செயன்முறை இன்று இடம்பெற்றது

காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் மெளலவி அஷ்ஷெய்க் எம் ஐ எம் அஸ்லம் (ஸஃதி) அவர்களால் முன்னெடுக்கப்பட்ட இச் செயற்பாட்டில் முதல் வருட மௌலவி மாணவர்கள் உட்சாகத்துடன் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது

ஊடகப் பிரிவு
2024.07.02

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் அல் குர்ஆன் மனனப் பிரிவுக்கு Sound Box வழங்கி வைப்பு.....!!நிந்தவூர் காஷிபுல...
01/07/2024

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் அல் குர்ஆன் மனனப் பிரிவுக்கு Sound Box வழங்கி வைப்பு.....!!

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் 2016ம் ஆண்டு மௌலவி பட்டம் பெற்று வெளியாகிய பழைய மாணவர்களால் கல்லூரியின் தேவை கருதி பெறுமதி மிக்க Sound Box ஒன்று அன்பளிப்பாக இன்று 2024.07.01 வழங்கி வைக்கப்பட்டது.

இந்த சதகதுல் ஜாரியாவை வழங்கி வைத்தமைக்காக அல்லாஹ் அவர்களுடைய ஆகுமான எண்ணங்களை நிறைவு செய்து வைப்பதோடு, அவர்களது குடும்ப பொருளாதாரத்தை வளப்படுத்தி, நோய் நொடிகள் இல்லாத நீண்ட ஆயுளையும் கொடுத்தருள்வானாக....!! ஆமீன்

நீங்களும் இதுபோன்ற நிலையான தர்மங்களை அல்லாஹ்வுக்காக செய்ய விரும்பினால் நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியுடன் தொடர்பு கொள்ளவும்

தொடர்புகளுக்கு
0672259456
0760104489
077 606 1933
0723 171 171

ஊடகப் பிரிவு
2024.07.01

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மௌலவி மாணவர்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடநெறி ஆரம்பம்...!!Editor நிந்...
28/06/2024

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மௌலவி மாணவர்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடநெறி ஆரம்பம்...!!

Editor

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் ஷரிஆ பிரிவில் கல்வி பயிலும் மௌலவி மாணவர்களது தகைமைகளை மேம்படுத்தும் வகையில் இன்று முதல் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடநெறியை கற்பிப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

கிழக்கிலங்கையின் வரலாற்றில் மிகவும் பிரபல்யம் பெற்ற மிகப் பெரும் இஸ்லாமிய கலாபீடமான நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி அதன் 42 வருட கால வரலாற்றில் நூற்றுக்கணக்கான உலமாக்கள் மற்றும் மார்க்க அறிஞர்களை உருவாக்கி உள்ளது

இந்த அரபுக் கல்லூரி ஹிப்ழு மற்றும் சரிஆ என இரு பிரிவுகளைக் கொண்டு சுமார் 100 மாணவர்களுடன் மிகச் சிறப்பான முறையில் இயங்கி வரும் இவ் அரபுக் கல்லூரியின் கல்வி பயில்கின்ற மாணவர்கள் எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் நவீன கலைத் திட்டத்திற்கு அமைவாக சிங்களம், ஆங்கிலம், கணினி தொழில்நுட்பம் போன்ற பாடநெறிகளை போதிக்கும் செயற்திட்டமும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது

இதற்கு அமைய இங்கு கல்வி பயிலும் மௌலவி மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் "தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடநெறி (NVQ Level 3) இன்று 2024.06.25 ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இப்பாடநெறியை கற்பிப்பதற்கு என மிகத் திறமை வாய்ந்த ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இப்பாட நெறியை பூர்த்தி செய்யும் மௌலவி மாணவர்களுக்கு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட. சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Address

Hospital Road , Nintavur/03
Nintavur
32340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kashiful Uloom Arabic College - Nintavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share