10/05/2026
#இலங்கை #ஜனாதிபதி_செயலகத்தை #பார்வையிட்ட_காஷிபுல் #உலூம்_அரபுக் #கல்லூரி_மாணவர்கள்.
(2026.05.06)
நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் வருடாந்த கல்விச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவர்கள் இலங்கை ஜனாதிபதி செயலகத்தை பார்வையிட்டனர்.
இந்த விஜயத்தின் போது, அரசின் நிர்வாக செயற்பாடுகள், ஜனாதிபதி நிதியம் தொடர்பான பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரச சேவைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், சமூக நலத்திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் சேவை அமைப்புகள் பற்றிய தெளிவான அறிவையும் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.
விஜயத்தின் நிறைவாக, ஜனாதிபதி செயலகத்தின் சார்பில் மாணவர்களுக்கு நினைவுப் பரிசாக மரக்கன்றுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்த பயனுள்ள விஜயம் மாணவர்களுக்கு அரசின் செயற்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் சிறந்த அனுபவமாக அமைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்...
ஊடகப் பிரிவு
காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி
நிந்தவூர்