SEUSL Media Unit

SEUSL Media Unit Welcome to the hub of South Eastern University of Sri Lanka's vibrant community!

16th General Convocation of the South Eastern University of Sri Lanka will be held as scheduled on the 10th and 11th of ...
03/02/2024

16th General Convocation of the South Eastern University of Sri Lanka will be held as scheduled on the 10th and 11th of February 2024 in six sessions at the Main Auditorium of the University in Oluvil.

2,152 graduands from six Faculties (Arts & Culture, Management & Commerce, Applied Sciences, Islamic Studies & Arabic Language, Engineering and Technology) will receive their degrees at this convocation.

19/01/2024

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ONLINE ஊடாக!

அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கின் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் கல்வி நடடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. அவைகள் மீண்டும் 2024.01.22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் இன்று இடம்பெற்ற ஆலோசனைக்குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக, அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிகழ்நிலை (online) முறைமையில் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் ஜனவரி 22, 2024 முதல், அனைத்து கல்வி நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரும் வரை நிகழ்நிலை மூலம் நடத்த தீர்மானிக்கப்பட்டதாக பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.

வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏற்பட்ட சிதைவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்படுவதாகவும் மறுசீரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான சூழல் மாணவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலேயே மேற்படி தீர்மானத்துக்கு வந்ததாகவும் மிகவிரைவில் கல்வி நடவடிக்கைகள் சுமூக நிலைக்கு திரும்பும் என்றும் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் குறிப்பிட்டார்.

இதேவேளை சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறும் என்று மேலும் தெரிவித்தார்.

ஊடகப் பிரிவு
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

17/01/2024
14/01/2024
South Eastern University of Sri Lanka (SEUSL) announced today the immediate suspension of all academic activities until ...
10/01/2024

South Eastern University of Sri Lanka (SEUSL) announced today the immediate suspension of all academic activities until January 16th, 2024, due to adverse weather conditions. This decision was made by the university's Senior Advisory Committee after careful consideration of the potential risks posed by the current weather forecast.

சீரற்ற காலநிலை காரணமாக இன்று முதல் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் (SEUSL) அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய காலநிலை முன்னறிவிப்புகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகளை கவனமாக ஆராய்ந்த பிறகு பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

தென்கிழக்குப் பல்கலையில் 2024 கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு! பொது நிர்வாக மற்றும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சி...
02/01/2024

தென்கிழக்குப் பல்கலையில் 2024 கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு!

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய 2024 ஆம் ஆண்டின் அரச கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு 2024.01-01 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதான கேட்போர் கூடத்தில், உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

உபவேந்தரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவின் அணிவகுப்பும் இடம்பெற்றது. பின்னர் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் அவர்களால் அரசாங்க சேவை சாத்தியப்பிரமாண உறுதிமொழி தமிழிலும் பதில் நிதியாளர் சீ.எம்.வன்னியாராச்சி அவர்களால் சிங்களத்திலும் வாசிக்கப்பட்ட அதேவேளை அனைத்து உத்தியோகத்தர்களும் குறித்த உறுதிமொழியைக் கூறி கடமைகளை பொறுப்பேற்றனர்.
நாட்டுக்காக உயிர் நீத்த முப்படடையினருக்காக இரண்டு நிமிட மௌனம் அனுஷ்ட்டிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இங்கு உரையாற்றிய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், எங்களால் உறுதிகொள்ளப்பட்ட சாத்தியப்பிரமாணத்துக்கு அமைவாக எங்களது சேவையைப் பெறுவோர் பயனடைய வேண்டும் என்றும் அதற்காக நாங்கள் அனைவரும் தாங்கள் தங்களது கடமைகளை சரிவர ஆற்ற வேன்டும் என்றும் “வலுவான எதிர்காலத்துக்கான தொடக்கவுரை” என்ற கருப்பொருளை முன்னிறுத்தி நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை மெய்ப்படுத்தி மக்கள் மையப் பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கு வினைத்திறன்மிக்க மனித வளத்தினைக் கொண்ட அரச நிருவாகத்தின் பங்காளராகிய நாங்கள்,
அதி மேண்மைக்குரிய ஜனாதிபதி அவர்களின் நாட்டைக் கட்டியெழுப்பும் புதிய யுக்திகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்கள் ஆற்றவேண்டிய பங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உச்ச அளவில் ஆற்ற அனைவரும் முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வின்போது பதில் நிதியாளர் சீ.எம்.வன்னியாராச்சி, நூலகர் எம்.எம்.றிபாயுடீன் பீடாதிபதிகள் பேராசிரியர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் சிரேஷ்ட்ட கனிஷ்ட்ட விரிவுரையாளர்கள் நிருவாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.

புதுவருட நிகழ்வின்போது உபவேந்தர் பதில் பதிவாளர் மற்றும் ஊழியர்கள் மாணவர்கள் என பலரும் தங்களது புதுவருட வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

-பல்கலைக்கழக ஊடக பிரிவு-

Address

Oluvil Park
Oluvil
32360

Alerts

Be the first to know and let us send you an email when SEUSL Media Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to SEUSL Media Unit:

Share