19/12/2020
இன்னொரு அழகிய மாலைப்பொழுது அதிலும் விசேடமாக கத்தாரின் தேசிய தினம் புத்தளம் சாஹிராவிம் வசமானது.
ஆம் இன்று புத்தளம் சாஹிரா கத்தார் மண்ணில் சாதனைப்படைத்தது.
Zahira College Colombo OBA Qatar கொழும்பு சாஹிரா பழைய மாணவர் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்ட அணிக்கு 7வர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் கடந்த வாரம் நடந்த முதல் சுற்றுப்போட்டியில் குழுவில் முதல் அணியாக வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு தெரிவானது.
இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் கம்பளை சாஹிரா அணிக்கு எதிராக 9 க்கு 4 என்ற கோல் அடிப்படியில் சிறப்பான வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் மாவனல்லை சாஹிராவிடம் மோதி 4க்கு 3 என்ற வெற்றிக்கோல்களை பெற்று எந்த போடியிலும் தோல்வியடையாது செம்பியன் பட்டத்தை கட்டார் மண்ணில் சாதனையைப் பதிந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.
இந்த வெற்றி புத்தளத்துகான வெற்றி. கட்டார் வாழ் புத்தளம் மக்களின் வெற்றி. நாங்கள் ஒவ்வொருவரும் இவ்வெற்றியின் உரிமையாளர்கள்.
களத்தில் அனல் பறந்த வீரர்களின் போராட்டம், தலைமைப்பயிற்றுவிப்பாளரின் ஒவ்வொறு நொடிக்குமான அறிவுறுத்தல்கள், சாஹிரா கால்பந்தாட்ட அணியின் நிர்வாக குழுவினரின் ஒன்றிணைந்த கள ஏற்பாடுகள், புத்தளம் சகோதரர்களின் வின்னைப்பிளந்த ‘GO ZAHIRA GO’ ஆதரவு கோசங்கள் அனைத்தும் ஒறுமித்து இந்த வெற்றிக்கிண்ணத்தை எமதாக்கியது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் புத்தளம் சாஹிராவின் பாடசாலைக் கீதம் ஒலித்து எம்மை மீண்டும் பாடசாலை உணர்வில் 100% கட்டிப்போட்டது, இங்கு எமக்கு கிடைத்தது இறைவனின் அருட்கொடையின்றி வேறில்லை.
மீண்டும் மீண்டும் அல்லாஹ்விற்கு நன்றிகூரி புத்தளம் சாஹிராவின் வெற்றியை கொண்டாடுவோம். GO ZAHIRA GO!