15/12/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ!
கடந்த மூன்று நாட்களாக (2025.12.12 – 2025.12.14) காலை மற்றும் மாலை நேரங்களில், ஊரில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இணைத்து நடத்தப்பட்ட கணிதப் பாடத்தின் அலகு ரீதியான மீட்டல் Paper Class வகுப்பானது, நேற்று (2025.12.14) மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவடைந்தது.
இவ்வகுப்புகளை சிறப்பாக நடாத்துவதற்காக தங்களது பெறுமதியான நேரங்களை ஒதுக்கி வருகை தந்த எமது வளவாளர்கள்:
• Asam – SUSL
• Nashath – UOM
• Sajeeth – UOK
• Asam – EUSL (TC)
• Haseena – SEUSL
• Nusra – SEUSL
• Safna – EUSL
• Farwees – EUSL (TC)
• Abdullah – UOJ
• Imran – SEUSL
• Asky – SUSL
• Safeek – SEUSL
• Waseem – EUSL
• Rilakhan – EUSL (TC)
மேலும், நேற்றைய இறுதி நாளில், எமது Alumni உறுப்பினர்களான Isfar Sir மற்றும் Imthiyas அவர்களும் எம்முடன் இணைந்து இந்த மகத்தான கல்விச் சேவையை சிறப்பாக நிறைவேற்றினர்.
இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுவதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து வளவாலர்களுக்கும், Alumni உறுப்பினர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
அல்லாஹ் அவர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் பரக்கத்தையும் வெற்றியையும் வழங்குவானாக.
மேலும், இந்நிகழ்விற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கிய மூன்று பாடசாலைகளின் அதிபர்கள், எம்மோடு இறுதி வரை தமது பெறுமதியான நேரங்களை ஒதுக்கி எம்மோடு அர்ப்பணித்த மதிப்பிற்குரிய பிரதி அதிபர் முபீதா ஆசிரியை, உதவி அதிபர் ஹபீபா ஆசிரியை அவர்களுக்கும் றிஸ்வான் ஆசிரியர் மற்றும் சபீர் ஆசிரியர் அவர்களுக்கும் எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அத்தோடு, எந்தவித சலிப்பும் இன்றி, மிகுந்த ஆர்வத்துடனும் ஒழுங்குடனும் இவ்வகுப்புகளில் கலந்து கொண்ட 2025 / 2026 கல்வியாண்டு மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.எல்லோரும் சிறப்பான பெறுபேற்றினை பெற எமது பிரார்த்தனை என்றும் இருக்கும்.
மேலும், நேற்றைய இறுதி நாளில் தாமாக முன்வந்து Refreshment (Milk Packet) வழங்கி, கல்விக்காக உதவிய:
1. Mr. Rizvi Bin Aswath
2. Mr. Rizan Abdul Manaf
3. Mr. Ramzan
4. Mr. Akram
ஆகியோருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இன் ஷா அல்லாஹ் எதிர்காலங்களிலும் இவ்வாறான நன்மையான காரியங்களில் பங்கெடுங்கள் இறைவன் பரகத் செய்வானாக!!
இவ்வாறான நன்மையான காரியங்களில் பங்கெடுக்க உங்கள் அனைவருக்கும் சந்தர்ப்பமளிக்க USAP காத்திருக்கிறது.
மேலும் தொடர்ச்சியாக எமக்கு Editing உதவியினை செய்துவரும் எமது Editor (UOP)அவர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாக்கட்டும்.
குறிப்பு (Note):
இவ்வகுப்புகள் மூன்று நாட்கள் நடைபெற்ற போதிலும், மாணவர்களின் #பெற்றோர்கள் எவரும் அவ்விடத்திற்குச் வருகை தராதது ஒரு கவலையளிக்கும் விடயமாகும்.
எமது ஊரில் இந்த நிலைமை மாற்றம் பெற வேண்டும்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்வி மீது அதிகமான #கரிசனையும் பங்குபற்றலும் காட்ட வேண்டியது இன்றியமையாததாகும்.
University Students‘ Association – Pulmoddai.